''தமிழண்டா இயக்கத்தின் நோக்கம் இதுதான்!'' - 'பொருநை' ஆவணப்பட இயக்குநர் |"This is the objective of the 'Tamilanda' movement!" — Director of the 'Porunai' documentary

ஹிப் ஹாப் ஆதியின் ‘தமிழண்டா இயக்கம்’ சார்பாக நாங்களும் எங்களுடைய குழுவினரும் சுமார் ஓராண்டு காலம் பொருநை நதிக்கரையோரப் பகுதிகளில் தங்கி இந்த ஆவணப் படத்திற்கான பணிகளை மேற்கொண்டோம்.

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று முக்கிய வரலாற்றுத் தளங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வுகள் அனைத்தையும் இந்த பொருநை ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

அகழ்வாய்வுக் குழிகளில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன, அவை எத்தனை அடி ஆழத்தில் இருந்து கண்டெடுக்கப்படுகின்றன, தொல்லியல் அறிவியலின் படி அவை எவ்வாறு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன என்ற ஒட்டுமொத்த செயல்முறையையும் பதிவு செய்யும் முதல் ஆவணப்படம் இதுதான்.

Porunai Documentary Stills - BTS

Porunai Documentary Stills – BTS

இந்த ஆவணப்படத்தின் ஆராய்ச்சிக்காக, பிரிட்டிஷ் காலத்து வரலாற்று ஆவணங்கள், கால்டுவெல் மற்றும் எச்.எச்.வில்சனின் குறிப்புகள் உள்ளிட்ட பலரின் வரலாற்று நூல்களை விரிவாக வாசித்தோம். தமிழ் வரலாற்றில் மதுரைக்கு முன்னரே கொற்கை துறைமுகம் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் எவ்வாறு கண்டறிந்தனர் என்ற பின்னணியும், தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் இந்த அகழ்வாராய்ச்சியை பற்றிய பார்வையும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு முன் ‘தமிழண்டா இயக்கம்’ மூலம் நாங்கள் எடுத்திருந்த ‘தமிழி’ ஆவணப்படத்திற்காக பல்லாயிர கிலோ மீட்டர் பயணித்திருந்தோம். அதுபோல, இந்த ஆவணப்படத்திற்காகவும் பல வரலாற்றாசிரியர்களைச் சந்தித்து நாங்கள் பேட்டி கண்டிருக்கிறோம். இந்த ஆவணப்படத்தில் தொல்லியல் துறையைச் சேர்ந்த முன்னணி அறிஞர்களின் நேர்காணல்களும் முக்கியமானதாக இருக்கும்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed