``தன்வீட்டுப் பெண்களையே பாதுகாக்க முடியாதவர் முதல்வர் விஜய்" - திமுக பரந்தாமன் பேட்டி | Paranthaman has responded to CM Vijay's speech in Maduranthakam.

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆற்றிய உரையில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “மதுராந்தகத்தில் 27 நிமிடங்களுக்கு மேலாக உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தனது 5 மாத ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் எதையும் குறிப்பிடவில்லை. மாறாக, திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து உரையாற்றியுள்ளார். பழைய வசனங்களையே மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

பா.ஜ.க தலைவர்கள் அவரது குடும்பத்தையும் தாயாரையும் தவறாகப் பேசினார்கள். ஆனால், திமுக அவ்வாறு பேசியதாகக் குற்றம்சாட்டுகிறார். ஆனால் பா.ஜ.க தலைவர்கள் பேசியதைப் பெருந்தன்மையுடன் மன்னித்துவிட்டார். ஏனென்றால் பா.ஜ.க-வை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்.

டெல்லியிலும் தமிழகத்திலும் திமுக – பாஜக கூட்டணி அமைந்திருப்பதாகப் பொய்யான பரப்புரையைச் செய்து, உண்மையான பிரச்னைகளை மடைமாற்றம் செய்ய முயல்கிறார். மோடியையோ அல்லது பா.ஜ.க அரசின் சட்டங்களையோ எதிர்த்து அறிக்கைகூட வெளியிடத் தைரியமற்றவர்.

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed