நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தற்போது ஷூட்டிங் இல்லையென்பதால் குடும்பத்துடன் அஜித் நேரம் செலவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு தன் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக அவர் கொண்டாடினார்.
இப்படியான நிலையில் அஜித்குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனல் அஜித் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளதாக் அவரது மேலாளரான சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 15 ஆம் தேதி முதல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித் கலந்து கொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் காண