"சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிட வேண்டும் என்பது என் கனவு!" - கார்த்திக் சுப்புராஜ் | Karthik Subbaraj on 'Dorothy' TIFF Premiere & Keerthy Suresh Starrer


ஆனால், ‘டோரதி’ திரைப்படத்தின் கதையை எழுதத் தொடங்கியபோதே, இந்தப் படத்தை முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களுக்குக் கொண்டு சென்று, அதன் பிறகே திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடனான கூட்டணி அதைச் சாத்தியமாக்கியது. நான் இதுவரை எழுதிய கதைகளிலேயே ‘டோரதி’ தான் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான ஒன்று.

எனது முந்தைய திரைப்படங்களில் ஒரு ‘கேங்க்ஸ்டர்’ பின்னணி அல்லது நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களுக்கான சினிமாத்தனமான சில சுவாரஸ்யங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆனால், ‘டோரதி’ படமாக்கப்பட்ட இடம், கதைக்களம் என அனைத்தும் நிஜ வாழ்வியல் சூழலுக்கு மிக அருகில் இருக்கும்.

டோரதி படக்குழு

டோரதி படக்குழு

அதனால்தான், இது சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு நிச்சயமாகத் தேர்வாகும் என்று நம்பினேன். படத்தின் கதையைப் பற்றி அதிகம் வெளிப்படுத்தாமல், எந்தவித எதிர்பார்ப்புமின்றி ரசிகர்கள் இப்படத்தைக் காண வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

ஏனெனில், ஒரு திரைப்படத்தை எப்படி ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அதன் இயக்குநருக்கு நன்றாகத் தெரியும்.

டீசரில் காட்டியிருந்த விஷயங்களோடு, அடுத்த வாரம் வெளியாகவுள்ள டிரெய்லரும் வழங்கும் தகவல்களோடு ரசிகர்கள் இப்படத்தைத் திரையரங்கில் காணும்போது அது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்” எனப் பகிர்ந்திருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. [url=https://karkasnye-doma-spb11.ru]каркасный дом под ключ в спб цена[/url] — практичное решение для комфортного загородного проживания. Подобные постройки используют как для круглогодичной…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed