கலைஞர் ,ஸ்டாலின் , கமல் வேடம் அடைந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு. 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் கொடிகளை ஏந்தியவாறு வாகன மேற்கொண்டு வாக்குகளை பேரணி

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வேட்பாளர், க. செல்வம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சுடச்சுட உணவு

முன்னதாக காலையிலேயே கட்சி தொண்டர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு வெங்கடாவரம் பகுதியில் சுட சுட இட்லி மற்றும் சுடச்சுட கறி குழம்புகளுடன் காலை உணவு பரிமாறப்பட்டு பிரச்சாரத்தை துவங்கினார் . இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுக கட்சி கொடிகளை ஏந்தி மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்த செல்வம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

தலைவர்களின் வேடமிட்டு பிரச்சாரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளான வேதாச்சலம் நகர் , பலவா நகர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதி , எல்லப்பன் நகர் , செவிலிமேடு , உள்ளிட்ட 20-கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . மேலும் பிரச்சாரத்தில் மக்களை கவரும் வகையில் , மறைந்த முதலமைச்சர் கலைஞர், முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் , மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் வேடமிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார். வழியெங்கும் கட்சி நிர்வாகிகள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடரும் பிரச்சாரம்

இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் வேகவேகமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 6 சட்டமன்றத் தொகுதியை முழுவதும் வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதால் , ஒரு பகுதிக்கு 5 நிமிடத்திற்கு குறைவாகவே நேரத்தை ஒதுக்கி வாக்கு சேகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது

காஞ்சிபுரம் யாருடைய கோட்டை ?

செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2019 தேர்தல் நிலவரம் எப்படி ?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்