ஆதவ் அர்ஜூனா

ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி இன்று காலை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நேரில் சந்த்திருந்தார். விளையாட்டு மீது செண்பகமூர்த்தி ஆர்வம் கொண்டவர் என்பதனால், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனாவை மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், அரசியல் காரணங்களுக்காகவும் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி செண்பகமூர்த்தியால் தான் பாதிக்கப்பட்டதாக அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஆதவ் அர்ஜூனா

அவருடைய எக்ஸ் பக்கத்தில், “தமிழ் சினிமாவை தனது கைக்குள் மட்டுமே வைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நடந்தேறியது. செண்பகமூர்த்தி போன்ற நபரால் பாதிக்கப்பட்டோர் பலர். அதில் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகியவர்களில் நானும் ஒருவன்.

மோனோபாலியை உருவாக்கியவர். அம்பதாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர். சினிமாவில் தாங்கள் மட்டுமே என போலி பிம்பத்தை உருவாக்கி வாழ்ந்துகொண்டிருப்பவர்.

மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் வந்த பிறகாவது காலங்கள் மாறும்.. காட்சிகள் மாறும் என நினைத்தால்… இப்படியொரு புகைப்படம். பாதிப்படைந்தோரின் நிலையும் மனநிலையும் கொஞ்ச நஞ்சமல்ல. வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

திரைத்துறை இவரைப் போன்றவர்களால் மட்டுமே இயங்குவதாய் பிம்பம் அமைத்து மற்றவர்களை இழப்பிற்குள்ளாக்குவார்கள். எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவதியுற்றிருக்கிறார்கள். அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அவரது கட்சிக்காரரான நடிகர் இயக்குனர் திரு.போஸ் வெங்கட் தனது பேட்டியில் வெளிப்படையாக செண்பகமூர்த்தியின் மோனோபாலி பற்றி பேசியிருப்பார்.

மனதுவந்து கேட்டுக்கொள்கிறேன் இவர்களைப் போன்றவர்களை சரியாக பராமரிக்காமல் போனால் தமிழ் சினிமாவில் பலர் காணாமல் போய்விடுவார்கள். அது தவிர்க்க #செண்பகமூர்த்தி போன்றவர்களை இந்த அரசு தவிர்ப்பது நல்லது.

பாதிக்கப்பட்ட ஒருவனாகப் பதிகிறேன். தமிழ் சினிமாவிற்கு ஒரு சுதந்திரக்காற்றை உயிர்மூச்சை தருவீர்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் என் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறேன்.

இது தொடர்கதையாகக் கூடாது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொணர்கிறேன். தாங்கள் தலைமையேற்றிருக்கும் அரசும்.. அமைச்சரவையும் இத்தகைய சிண்டிகேட் தொழில்முறைகளைத் தடுக்கும் என நம்புகிறேன்.

மாற்றங்கள் என்பதே நம்பிக்கைதான். நிகழட்டும். திரையுலகம் மீளட்டும்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed