"அவனால் மட்டும்தான் ஒரு பெரிய இயக்குநராக முடியும்!" - மிஷ்கின் |"Only he can become a great director!" — Mysskin

ஒரு நாள் என் அலுவலகத்திற்கு வந்து அவன் ‘தலைவன் தலைவி’ படத்தின் கதையைக் கூறினான். அந்தத் திரைப்படத்தில் நான் ஒரு மேனேஜராகப் பணியாற்றினேன். அதாவது, அவனுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே ஒரு சிறிய மேனேஜர் போல வேலை பார்த்தேன். அதன் பிறகு, படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

அப்போது நான் அவனிடம், ‘சரி, தலைவன் உறுதியாகிவிட்டது; தலைவி யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவன், ‘தலைவி கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய, அழகான பெண்ணைத் தேர்வு செய்யலாம் சார்’ என்றான்.

உடனே நான், ‘டேய்… கதையின்படி தலைவனைத் தேர்வு செய்துவிட்டாய் என்றால், அதற்கு இணையாக ஒருவரைப் போட வேண்டும்’ என்று கூறி, நித்யா மேனனின் பெயரைப் பரிந்துரைத்தேன்.

ஆனால், நித்யா மேனன் தரப்பில் சம்பள விஷயத்தில் ஒரு பெரிய வெடிகுண்டைப் போட்டார்கள். தயாரிப்பாளர்கள் நாம் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அது மிகவும் அதிகம் எனக் கூறினர். அப்போது நான் அவர்களிடம், ‘அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை. பட்ஜெட்டைக் கணக்கு பார்க்காமல் அவருடைய திறமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்’ என்று அறிவுறுத்தினேன்.

அதன்பின், ஒரு மாதம் வரை பேசி இறுதியில் நித்யா மேனனை கமிட் செய்தார்கள். மீண்டும் பாண்டிராஜ், என்னை அந்தப் படத்தில் நித்யா மேனனின் அப்பாவாக நடிக்கக் கேட்டான். ‘சரி. அவளைவிட இரண்டு மடங்கு அதிக சம்பளம் வேண்டும்’ என்றேன். அப்போது ஓடியவன், இப்போது இந்தப் படத்திற்குதான் கதைச் சொல்ல வந்தான்.” என்றார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed