வேலூர் கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸில் வந்த பள்ளி மாணவி! | accident caused by teachers' negligence - government school girl student arrives in an ambulance to meet the vellore collector


வேலூர் அருகேயுள்ள அரியூர் காந்தி நகரைச் சேர்ந்த தம்பதி ரூபன்குமார் – தீபிகா. இவர்களின் மகள் ரூபிகா தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்புப் பயின்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார் ரூபிகா.

அன்றைய தினம், ஊசூர் தெள்ளூர் சாலை அருகிலுள்ள அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதால் அதில் கலந்துகொள்வதற்காக சக மாணவிகள் சிலருடன் ரூபிகாவையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார் உடற்கல்வி ஆசிரியர். மாணவிகளும் அந்தப் பள்ளிக்குச் சென்று விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு மதிய வேளையில் தங்களின் பள்ளிக்குத் திரும்புவதற்காக ஊசூர் பேருந்து நிறுத்தப் பகுதிக்குச் சாலையோரமாக நடந்து வந்தனர்.

மாணவி ரூபிகா

மாணவி ரூபிகா

அப்போது, வேகமாக வந்த கார் சாலையோரமாகச் சென்ற மாணவிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரூபிகா உட்பட 7 மாணவிகள் காயமடைந்ததால், விரைவாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரூபிகாவுக்கு மட்டும் இடுப்பு எலும்பு மற்றும் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால், அவரால் எழுந்து நடக்க முடியாமல் போனது. மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து 5 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு மாணவி ரூபிகாவை டிஸ்சார்ஜ் செய்திருக்கின்றனர். இதனால், மேல்சிகிச்சைக்குச் செல்ல வழித்தெரியாமல் மாணவி ரூபிகாவின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மகளின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோரும் திக்குதிசைத் தெரியாமல் போராடி வருகின்றனர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed