லெபனான் மீது தாக்குதல், ஹோர்மூஸ் நீரிணை மூடல்: ஈரானை மீண்டும் தாக்குவோம் அமெரிக்க, தொடரும் போர்பதற்றம் - Kumudam

ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் சரமாரித் தாக்குதல் நடத்தியது. இதில், 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இதனால் பாகிஸ்தானில் நாளை ஈரான், அமெரிக்க இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. 

லெபனான் மீது தாக்குதல் 254 பேர் பலி 

ஈரான் உடனான இந்த தற்காலிகத் இடைவெளி லெபனானுக்குப் பொருந்தாது. ஹிஸ்புல்லா ஒழிக்கப்படும் வரை அங்கு குண்டுவீச்சு தொடரும்.எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. 10 நிமிட இடைவெளியில் 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியுள்ளது. இந்த மிக மோசமான தாக்குதலில் நேற்று ஒருநாள் மட்டும் 254 பேர் கொல்லப்பட்டு, 1,100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனோர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஹோர்மூஸ் நீரிணை மூடல்

இதற்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளது. இதனால், ஏராளமான சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் முடங்கியுள்ளன. அமெரிக்கா போர் நிறுத்தத்தையோ அல்லது இஸ்ரேல் வழியாகப் போரைத் தொடர்வதையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.

லெபனான் மீதான தாக்குதல் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையை மூடியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், அந்த நீரிணையை ஈரான் உடனடியாக திறந்துவிட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed