லிவ் இன் பார்ட்னர் கெளரியுடன் திருமணம் - தேதியை அறிவித்த பாலிவுட் நடிகர் ஆமீர்கான்!


பாலிவுட் நடிகர் ஆமீர்கான் பெங்களூரை சேர்ந்த கெளரி என்ற பெண்ணுடன் லிவ் இன் உறவில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கெளரியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆமீர்கான் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போதுதான் திருமணம் எப்போது என்பது தொடர்பான அறிவிப்பை ஆமீர் கான் அறிவித்து இருக்கிறார். வரும் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் எளிய முறையில் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் கெளரியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இது தொடர்பாக ஆமீர்கான் அளித்த பேட்டியில், `எளிய முறையில் ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்களை நீங்கள் ஆசிர்வதிக்கவேண்டும்’ என்று தெரிவித்தார். ஆமீர்கான் திருமணத்தை அவரது மூன்று பிள்ளைகளும் முன்னின்று நடத்த இருக்கின்றனர்.

திருமணத்தில் ஆமீர் கான் குடும்பம், கெளரி குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். நடிகர் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் அன்றைய தினம் மும்பையில் இருந்தால் திருமணத்தில் பங்கேர்பார்கள் எனத் தெரிகிறது.

ஆமீர்கான் கடந்த ஆண்டு தனது 60வது வயதில் தன் புதிய லைஃப் பார்ட்னரை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆமீர்கான் ஏற்கனவே ரீனா தத் மற்றும் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்து இரண்டு பேரையும் விவாகரத்து செய்துவிட்டார். இப்போது மூன்றாவதாக கெளரியை திருமணம் செய்ய இருக்கிறார். கெளரிக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.

கெளரிக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருக்கிறான். ஆமீர்கான் இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டபோதிலும் அவர்களுடன் தொடர்ந்து சுமூக உறவை பேணி வருகிறார்.

ஆமிர் கான் மற்றும் கௌரி ஸ்ப்ராட் பெங்களூரில் உள்ள அவரது உறவினர் நுசாத் கான் மூலம் ஒருவரையொருவர் முதலில் சந்தித்தனர். இருவரும் ஒரு வருடம் பழகினார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது 60 வது பிறந்தநாளை முன்னிட்டு அமீர் அவரை தனது லிவ் இன் பார்ட்னரை அறிமுகப்படுத்தினார். இருவரும் அவரது பாந்த்ரா இல்லத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த மாதம் கௌரியை திருமணம் செய்து கொள்வதாக அமீர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed