ரூ.40 கோடி சாம்ராஜ்யத்தின் ராணி கௌரி ஸ்ப்ராட்! | aamir khan gauri spratt wedding business empire


அவரது அடையாளம் இத்துடன் முடிந்துவிடுவதில்லை. அவரது தாய் ரீட்டா, பஞ்சாபி-ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். தந்தை ராபர்ட் ஸ்ப்ராட், தமிழ்-பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆச்சரியமூட்டும் விதமாக, கௌரியின் தாத்தா ஒரு பிரிட்டிஷ் வம்சாவளி எழுத்தாளர்.

1920-களில் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். இப்படிப்பட்ட ஒரு வரலாற்றுப் பின்னணியில் இருந்து வருகிறார் கௌரி. ஊட்டியின் ப்ளூ மவுண்டன் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த அவர், லண்டன் கலைப் பல்கலைக்கழகத்தில் ஃபேஷன் டிசைன் மற்றும் போட்டோகிராஃபியில் உயர்கல்வி பெற்றார்.

ஆமீர் கானுடன் தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, கௌரிக்குத் திருமணமாகி க்வின் என்ற மகன் உள்ளார். ஆமீர் – கௌரி திருமணத்தில் க்வின் கலந்துகொண்டது, இந்த உறவின் முதிர்ச்சியையும், புரிதலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தனியுரிமையைப் பேணுவதில் கௌரி காட்டிய கவனம் அபாரமானது. ஆமீர் கான் இதுபற்றி குறிப்பிடும்போது, “நான் பரபரப்பில் இருந்து விலகி இருந்ததாலும், கௌரி தனது வாழ்க்கையை ஊடக வெளிச்சத்தில் இருந்து தள்ளியே வைத்திருந்ததாலும் எங்கள் உறவை ரகசியமாக வைத்திருக்க முடிந்தது” என்றார்.

இந்த பிரம்மாண்ட பின்னணிக்கு மத்தியில்தான், ஜூலை 5 அன்று பாந்த்ராவில் உள்ள அவர்களது இல்லத்தில், இயக்குநர் அசுதோஷ் கவாரிகர் உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.

இருவரும் சமீபத்தில் குடியேறியுள்ள இந்த கடலை நோக்கிய பிரம்மாண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் 60 முதல் 70 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.

பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டில் ஒரு சொகுசு வீடு, தொழில் நிறுவனத்தின் தலைமையகம் என கௌரிக்குச் சொந்தமான சொத்துக்களின் பட்டியலும் நீள்கிறது. ஆக, ஆமீர் கானின் கரம்பிடித்திருப்பது ஒரு சாதாரண பெண் அல்ல; மாறாக, தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தைக் கட்டி, தனது அடையாளத்தை ஆழமாகப் பதிவு செய்த ஒரு பெண்மணி.!



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed