ரஜினியுடன் நடனம்! 'ஜெயிலர் 2' வாய்ப்பு குறித்து நெகிழ்ந்து பதிவிட்ட நடிகை பூர்ணா! |"Dream Come True": Actress Poorna's Emotional Post on Dancing with Rajinikanth in 'Jailer 2'


அந்தப் பதிவில் அவர், “சிறுவயதிலிருந்தே எனக்கு நடனம்தான் எல்லாம். ஒரு நடன ஆசிரியராக வேண்டும் என்பதுதான் எப்போதும் என் மிகப்பெரிய கனவாக இருந்தது.

இன்று துபாயில் அந்தப் ஆசை நனவானதைக் கண்டு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என் கணவர் என் கனவை நம்பி அதை நிஜமாக்கினார்.

ஒரு சூப்பர் ஹீரோவுடன் இணைந்து நடனமாட வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டதுண்டு. ஆனால், ஒருநாள் ரஜினிகாந்த் சாரின் படத்தில் ஆடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் சிறிதும் நினைத்துப் பார்த்ததில்லை.

என் மிகப்பெரிய கனவுகளில் ஒன்றை நனவாக்கியதற்கும், என் நடனத்திற்கு நீங்கள் காட்டிய அனைத்துப் பாராட்டுகள், அன்பு மற்றும் ஊக்கத்திற்கும் நெல்சன் சாருக்கு மிக்க நன்றி.

அனைத்திற்கும் மேலாக, இந்தப் பயணம் என் அம்மாவின் கடின உழைப்பு, தியாகங்கள் மற்றும் அளப்பரிய ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.

இன்று நான் அடைந்துள்ள இந்த நிலைக்கு அவரே காரணம். அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தத் தருணம் என் வாழ்வின் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணங்களில் ஒன்றாக எப்போதும் நிலைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Найти подходящий микрозайм можно в МАХ канале https://max.ru/channel_bank_neva, где мы постоянно размещаем свежие предложения микрофинансовых организаций и помогаем сравнивать условия…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed