'மீனவ சமூகத்தினருக்கு முன்னுரிமையில்லை...' - தூத்துக்குடி தி.மு.க-வில் வெடிக்கும் பஞ்சாயத்து! | Tuticorin DMK Fails in Social Engineering

தூத்துக்குடி தி.மு.க-வில் சமூக பிரதிநித்துவம் இல்லையென புது பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. மாவட்டத்தில் த.வெ.க வளர்ச்சியை தடுக்க மீனவ சமூகத்தினருக்கு கட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது!

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் “தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில் தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதிகளில் மீனவ சமூகத்தை சார்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆனால், மீனவ சமூகத்தினருக்கான முக்கியத்துவமும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் தி.மு.க-வில் கிடைப்பதில்லை. தூத்துக்குடி தொகுதியில் 90,000 மீனவர்கள் வசித்துவரும் நிலையில் அந்த மாவட்ட எம்.எல்.ஏ-க்கள், மேயர், கட்சி மாவட்டச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் மாற்று சமூகத்தினர்தான் இருக்கிறார்கள்.

அமைச்சர் ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

அமைச்சர் ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

நீண்டகாலமாகவே கொதிப்பிலிருந்து மீனவ சமூக மக்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க-வுக்கு அந்த சமூக வாக்குகள் சென்றுவிட்டன. தூத்துக்குடியில் வென்ற ஸ்ரீநாத்துக்கு த.வெ.க தலைமை மீன்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கியிருப்பதால் மீனவ சமூக மக்களுக்கு த.வெ.க பக்கம் சாய்ந்துவிட்டனர். இது தூத்துக்குடி தி.மு.க-வுக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.”

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed