மத்திய அரசின் திட்டங்கள்: விஜய் அரசை கேள்வி கேட்ட அப்பாவு|Appavu Asks Vijay to Take on Centre Over Key Tamil Nadu Issues


தவெக அரசு மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்க்கவில்லை என்றும், கேள்வி கேட்கவில்லை என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு.

அந்தப் பதிவு…

2021-2026-ல் திமுக ஆட்சியில்

இருந்தபோது ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நிதியைக் குறைப்பதற்கும் பெயரை மாற்றுவதற்கும் எதிரான தீர்மானங்கள் மற்றும் மசோதாக்கள் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, ஒன்றிய பாஜக அரசை நேரடியாக எதிர்த்து மக்கள் பக்கம் நின்று வெற்றியைத் தந்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின் - திமுக

ஸ்டாலின் – திமுக

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் ஒன்றிய பாஜக அரசு கனிமம் எடுக்க முயற்சித்தபோது, “நான் முதல்வர் பதவியை இழந்தாலும்” அரிட்டாபட்டியில் கனிமங்கள் எடுக்க ஒன்றிய பாஜக அரசை அனுமதிக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, தமிழக மக்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed