மடப்புரம் அஜித்குமார் காவல் மரணம்: டிஎஸ்பி உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு | Madapuram Ajithkumar custodial death: Court orders murder case to registered against DSP


சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக தனிப்படை போலீசார் அஜித்குமாரைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், மற்றொரு போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சம்பவத்தின்போது மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோருக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட 5 ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

மதுரை மாவட்ட நீதிமன்றம்

மதுரை மாவட்ட நீதிமன்றம்

அப்போது மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட 5 ஆவது கூடுதல்  நீதிமன்ற நீதிபதி  தாமோதரன் உத்தரவிட்டார். 

நீதிபதி  உத்தரவிட்ட நிலையில் DSP, ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் அமரவைக்கப்பட்டுள்ளனர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Автомобильный рынок https://prestige-avto.com.ua рассказывает о автомобильных новинках. Изучайте характеристики.

  2. Информационная лента https://uamc.com.ua рассказывают актуальные вопросы. Следите за обновлениями.

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed