புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. ரிஷப் பந்த் நீக்கம்.. ஆப்கன் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. | கிரிக்கெட் செய்திகள்

இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விவரங்களை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார். அதன்படி டெஸ்ட் அணி கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளா். துணைக் கேப்டனாக இருந்த பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், பிரதீஷ் கிருஷ்ணா, துருவ் ஜூரேல்  ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் மனவ் சுதர், ஹர்ஷ் துபே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் ஆகியோர் முதன்முறையாக இந்திய அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ளனர்.

ஒரு நாள் அணியை பொருத்தவரையில் கில் கேப்டனாகவும், ஸ்ரேயல் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு இஷான் கிஷனும் அணிக்கு திரும்பியுள்ளார். விராட் கோலி, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில் புதுமுகங்களான பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர், உடல் தகுதி பெற்றால் அணியில் இடம்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி – சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்ஷன், ரிஷப் பந்த், தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், மானவ் சுதர், ஹர்ஷ் துபே, துருவ் ஜூரல்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி – சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் துபேர், குர்னூர் துபேர்.

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed