Last Updated:
ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், 39 வயதான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. களிமண் தரையில் விளையாடப்படும் இந்த தொடரை வென்று 25 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல ஜோகோவிச் தீவிரம் காட்டி வருகிறார்.
அதன்படி 2வது சுற்றில் உள்ளூர் வீரர் வாலண்டின் ராயரை எதிர்கொண்ட ஜோகோவிட் 6-3, 6-2, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். அதேநேரத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையுமான எலினா ரைபகினா உக்ரைன் வீராங்கனை யூலியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
முன்னதாக கடும் வெயில் காரணமாக செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.























