இந்நிலையில் தான் பேசியது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ” திமுக ஆட்சியில் தடையில் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை நான் ஏற்கனவே 2011- 16 ஆம் ஆண்டுகளில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்பாடு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியுள்ளேன்.
எனவே நான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கவே மாட்டேன். நானும் மாடுபிடி வீரர்தான். எனவே இளைஞர்களை எனக்கு எதிராக திருப்பி விட பார்க்கிறார்கள்

இளைஞர்கள் எப்போதும் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக இருப்பவர்கள். நான் பேசியது ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்து போட்டி நடத்தினால் வெளிநாடுகளைப் போன்று ஒரு மைதானத்திற்குள்ளேயே இளைஞர்களின் திறமையை அடக்குவது போல அமைந்துவிடும் என பேசினேன்.
ஜல்லிக்கட்டு மைதானம் என்பது கால்நடைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட நிலையில் கால்நடை துறையிடம் இதுவரை அந்த இடம் ஒப்படைக்கப்படவில்லை.
























