துருக்கியில் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் நவ்பிரீத் சிங்கை கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
“துருக்கியில் தலைமறைவாக இருந்த பயங்கர போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்பிரீத் சிங்கை வெற்றிகரமாக நாடு கடத்தி அழைத்து வந்ததன் மூலம், நரேந்திர மோடி அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது.

“நவாப் விர்க்’ என்ற போலி அடையாளத்தில் துருக்கியக் குடியுரிமையைப் பெற்றிருந்த அவன், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஹெராயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போன்ற கொடிய போதைப்பொருட்களைத் தொடர்ந்து கடத்தி வந்தான்.
நமது புலனாய்வு அமைப்புகள் அவனைப் பின்தொடர்ந்து, அவனது போலி முகமூடிகளை ஒவ்வொன்றாகக் கிழித்தெறிந்து, அவனது உண்மையான அடையாளத்தை தெரியப்படுத்தி, அவனை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளைச் சட்டப்பூர்வமாக உறுதிசெய்தன.
இன்று அவன் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

























Now noticing that the post never raised its voice even when making a strong point, and a look at zalqino…