திருப்பத்தூர்: புதன் சந்தையை நாற்றமடிக்க வைக்கும் கோடியூர் ஏரி – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?| Tirupathur: Kodiyur Lake Stench Hits Wednesday Market – Will Municipality Act


புதன்கிழமைகளில் சந்தைக்கு வரும் மக்கள், துர்நாற்றத்தால் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ஏரியை ஒட்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட நேரம் அப்பகுதியில் இருப்பதால் துர்நாற்றத்தைத் தாங்க முடியாத சூழல் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஏரியைச் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். ஏற்கெனவே தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி, ஏரியைத் தூய்மைப்படுத்த வேண்டும். மேலும், ஏரியை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும்” என்பதே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக கூடும் முக்கியமான சந்தைப் பகுதி என்பதால், கோடியூர் ஏரியைச் சீரமைத்து, குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுத்து, புதன் சந்தையைச் சுகாதாரமான இடமாக மாற்ற ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed