"த.வெ.க ஆட்சி வந்தது நல்லதுதான்!" - சொல்கிறார் நாதக பாத்திமா பர்கானா | “It’s Good That the TVK Government Came to Power!” Says NTK’s Fathima Farhana


“த.வெ.க ஆட்சியைப் பிடித்துவிட்டதால், நா.த.க இனி வளர்வது கடினம்தான் என்கிறார்களே!”

“த.வெ.க ஆட்சியைப் பிடித்திருப்பது தமிழகத்துக்கு சீரழிவுதான் என்றாலும் அரசியல்ரீதியாக அதிலொரு நன்மையும் இருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக சாதி, மதம், பணம், சின்னத்தை பார்த்து வாக்களித்துக் கொண்டிருந்த மக்களை தனது சினிமா கவர்ச்சி, போலி பிம்பத்தால் அதிலிருந்து வெளியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். ஆட்சியை பிடிக்க முடிந்த விஜய்யால் ஆட்சியை நடத்தமுடியவில்லை. அந்த அளவுக்கு திறமையில்லாமல் இப்போது தடுமாறுகிறார். எனவே மாற்று என ஏமாற்றத்துக்கு வாக்களித்த மக்களை அடுத்தமுறை உண்மையான மாற்றத்தை தரக்கூடிய நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள்”

பாத்திமா பர்கானா

பாத்திமா பர்கானா

“நா.த.க தி.மு.க-விடம் விலைபோய்விட்டதாகச் சொல்கிறார்கள்?”

“யார் ஆளும்கட்சியோ அவர்களை நோக்கித்தான் விமர்சனங்களை முன்வைக்க முடியும். அந்த வகையில் த.வெ.க-வை அதிகமாக விமர்சிப்பதால் த.வெ.க-வினர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இப்போதும் சொல்கிறோம் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸும் தமிழினத்தின் துரோகிதான். பா.ஜ.க மனித குலத்தின் விரோதிதான். புதிதாக வந்திருக்கும் த.வெ.க, தி.மு.க – பா.ஜ.க-வின் கலவைதான். நா.த.க-வை எவராலும் விலைக்கு வாங்க முடியாது. த.வெ.க ஆட்சியையும் தி.மு.க-வின் அரசியலையும் ஒழிப்பதே நா.த.க-வின் இலக்கு” 



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports