சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, செவிலியர்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜூம் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு போராட்டக்காரர்கள் வலுகட்டாயமாக கைது செய்ய முயற்சிக்கப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றன.
இந்த நிலையில், தேமுதிக தலைவரும், எம்.எல்.ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த் தன் எக்ஸ் பக்கத்தில்,“செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு கடும் கண்டனம்! சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடிய செவிலியர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் செவிலியர்கள், தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஜனநாயக வழியில் போராடியுள்ளனர்.
குறிப்பாக கொரோனா காலத்தில் நம் உயிரை பெரிதும் பொருட்படுத்தாமல், மக்களின் உயிரை காப்பாற்றிய “Nightingale”. அவர்களுடைய கோரிக்கையை இந்த அரசு செவி சாய்த்து நிறைவேற்ற வேண்டியது கடமை. பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர் பிரதிநிதிகளை மண்டபத்தில் அடைத்து வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களை விடுவிக்கக் கோரி போராடிய செவிலியர்களை இரவு நேரத்தில் காவல்துறையினர் கைது செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகும்.

செவிலியர்களின் குரலை காவல்துறை நடவடிக்கைகளால் அடக்க முயல்வதை விடுத்து, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு உடனடியாக வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். “சம வேலைக்குச் சம ஊதியம்” உள்ளிட்ட அவர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் பரிசீலித்து, நியாயமான தீர்வை விரைந்து வழங்க வேண்டும். கைது செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களது ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து அரசு சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். கொரோனா காலத்தில் நம் உயிரைக் காத்த செவிலியர்களின் உரிமைக்குரலை இன்று நாம் காப்பது நமது கடமை!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb


















![த்ரிஷ்யம் 3 முழு திரைப்படத் தொகுப்பு: ‘த்ரிஷ்யம் 3 தி கன்க்ளூஷன்’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 5 [LIVE]: அஜய் தேவ்கன், தபு, ஜெய்தீப் அஹ்லாவத், பிரகாஷ் ராஜ் நடிப்பில் ரூ 200 கோடி இந்திய நிகர மைல்கல்லை நெருங்குகிறது | இந்தி திரைப்பட செய்திகள்
| ACTPnews.com](https://actpnews.com/wp-content/uploads/2026/10/1791272012-300x169.avif)






Yesterday I was complaining about the state of online writing and today this site has temporarily fixed that complaint, and…