முதல்வர் விஜய்


மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார்.

“சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ ‘எலும்பை உடைப்பேன்’ என ஆர்த்தோ சர்ஜன் போல் பேசுகிறார். இன்னொரு எம்எல்ஏ ‘திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு நல்ல சாவே வராது’ எனப் பேசுகிறார்.

முதல்வர் விஜய்

இவ்வளவு நாட்களாக இதே மக்கள்தான் இவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். இதைப்போல் பேசிப் பேசித்தான் சட்டப்பேரவையில் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்றனர். மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்” என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் விஜய்யின் சட்டமன்ற பேச்சு குறித்து திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “Take Diversion அரசு! கோயபல்ஸ் முகம் என்ன என்பதை மாண்புமிகு முதலமைச்சர் இன்றைய சட்டமன்றத்தில் காட்டியுள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தனது துறை மீதான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத முதலமைச்சர், எப்படி Take Diversion நாடகத்தை நடத்தினார் என்பதை மக்கள் அறிவார்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed