பிரசித் கிருஷ்ணா - ரோஹித் சர்மா

Last Updated:

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பிரசித் கிருஷ்ணா - ரோஹித் சர்மா
பிரசித் கிருஷ்ணா – ரோஹித் சர்மா

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோடி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களைத் தனது அதிரடி பந்துவீச்சால் நிலைகுலையச் செய்த பிரசித் கிருஷ்ணா, 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

குறிப்பாக அவர் வீழ்த்திய முதல் மூன்று விக்கெட்டுகளையும் ஃபர்ஸ்ட் ஸ்லிப் (First Slip) திசையில் நின்றிருந்த கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினர்.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் மற்றும் ரஹ்மத் ஷா ஆகிய மூவரும் பிரசித் கிருஷ்ணா வீசிய ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்துகளை டிரைவ் செய்ய முயன்று, ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மாவிடம் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்தனர்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் ஒரு ஃபீல்டர் 3 கேட்சுகளைப் பிடிப்பது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 2004-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக இர்பான் பதான் பந்துவீச்சில் வி.வி.எஸ் லக்ஷ்மனும், 2018-ல் வங்கதேசத்திற்கு எதிராக ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விராட் கோலியும் 3 கேட்சுகள் பிடித்துள்ளனர்.

ஆனால், கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு போட்டியின் முதல் 3 விக்கெட்டுகளையும், அதுவும் அடுத்தடுத்து ஒரே பந்துவீச்சாளர் மற்றும் ஃபீல்டர் ஜோடி இணைந்து வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed