கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பசுபதீஸ்வரர் வெள்ளை குதிரை வாகனத்திலும் அம்பிகை பல்லாக்கு வாகனத்தில் திருவீதி உலா காட்சியளித்தார்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் சுவாமிகள் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகின்றனர். இந்நிலையில் கல்யாண பசுபதீஸ்வரர் வெள்ளை குதிரை வாகனத்திலும், அம்பிகை பல்லாக்கு வாகனத்திலும் திருவீதி உலா காட்சியளித்தனர். ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா ஆலய முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது.

ஆலயம் குடிப்புகுந்த சுவாமிகளுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் கும்ப ஆலாத்தியுடன், மகா தீபாராதனை காட்டினார். அதை தொடர்ந்து திருவீதி உலா சிறப்பாக நிறைவு பெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் வெள்ளை குதிரை திருவீதி உலா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

கரூர் மலையூர் ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயாத ஸ்வாமி ஆலயத்தில் பங்குனி உத்தர பெருவிழா.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கொடையூர் கிராமம், மலையூர் ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத ஸ்வாமி ஆலயத்தில் பங்குனி உத்திர முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக முருகப்பெருமானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக முருகப்பெருமானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவர் ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மலையூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்தரத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கரு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/