விராட் கோலி - கேன் வில்லியம்சன்

Last Updated:

ஒட்டுமொத்தமாக 378 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன், 19,346 ரன்களைக் குவித்துள்ளார்

விராட் கோலி - கேன் வில்லியம்சன்
விராட் கோலி – கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது நெருங்கிய நண்பரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, வில்லியம்சனுக்கு நெகிழ்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

விராட் கோலியும், கேன் வில்லியம்சனும் மைதானத்தில் கடுமையான எதிரிகளாகப் பலமுறை மோதியிருந்தாலும், மைதானத்திற்கு வெளியே மிகச்சிறந்த நண்பர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வில்லியம்சனின் 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் ஓய்வு அறிவிப்பு வெளியானதும், விராட் கோலி தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவருக்கு மிகவும் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் கோலி, “ஆரம்பத்தில் ஒரு எதிரியாகத் தொடங்கி, பல ஆண்டுகாலப் பயணத்தில் எனக்கு மிகச்சிறந்த நண்பராக மாறியவர் நீங்கள். இத்தனை வருடங்களாக உங்களது பேட்டிங்கைக் காண்பதும், உங்களுக்கு எதிராகப் போட்டியிடுவதும் எனக்குக் கிடைத்த பெருமை. அதைவிட, கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதற்கு அப்பாலுள்ள விஷயங்கள் குறித்து நாம் பகிர்ந்து கொண்ட பார்வைகளையும், நமது நட்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாம் பேசும் அல்லது சந்திக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நான் எப்போதும் பொக்கிஷமாகக் கருதுகிறேன். எனது சகோதரனுக்கு எப்போதும் என் வாழ்நாள் நல்வாழ்த்துகள். நீங்கள் உங்களது கடமையைச் சிறப்பாகச் செய்து முடித்து விட்டீர்கள். இப்போது கால்களை நீட்டி ஓய்வெடுத்து, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க உங்களுக்கு எல்லா தகுதியும் உண்டு. நண்பா… உண்மையான வாழ்க்கை இனிமேல்தான் தொடங்குகிறது!” என வாழ்த்தியுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கையின் தம்புள்ளையில் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான வில்லியம்சன், தனது 16 ஆண்டுகால பயணத்தில் நியூசிலாந்து அணிக்காகப் பல வரலாற்று வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 378 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 19,346 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed