இடைத்தேர்தலைத் திணிப்பவர்களையே முழு தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்! தாராபுரத்தில் சீமான் ஆவேசம் | tharapuram by election ntk seeman election campaign update.


மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 – ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதியும் நடைபெற இருக்கின்றன.

தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியினர் தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சீமான்

சீமான்
கோப்புப் படம்

தொடர்ந்து மக்களிடம் பேசிய சீமான், “நாங்கள் எந்தத் தேர்தலிலும் இதுவரை செல்லவில்லை. ஆனால், ஒருபோதும் மக்களை விட்டு செல்லவில்லை. விசிலை விடு விவசாயியைத் தொடு. இந்த இடைத்தேர்தல் என்பது வெறும் கட்சிகளுக்கு இடையேயான போட்டி மட்டுமல்ல. தற்போதுள்ள தவறான அரசியல் சிஸ்டத்தைக் கேள்வி கேட்கவும், உண்மையான மாற்றத்தை உருவாக்கவும் மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பு.

வாக்குக்கு பணம் வாங்காமல் மக்கள் அனைவரும் சிந்தித்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். சொந்த காரணங்களுக்காகவோ அல்லது கட்சி மாறுவதற்காகவோ பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் மீது இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தலுக்கான முழு செலவையும் ஏற்க வைக்க வேண்டும்.

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு ராஜினாமா செய்யப்படும் தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பெறுபவரையே உறுப்பினராகத் தேர்வு செய்ய வேண்டும். அதற்காக மீண்டும் தேர்தல் நடத்தக் கூடாது.

ஒட்டுமொத்த இந்தியத் தேர்தல் அமைப்பிலும் புதிய சட்ட விதியைக் கொண்டு வர வேண்டும். அதன் மூலமே பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது தடுக்கப்படும்” என்றார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Помню, соседка рассказывала. Ни спать, ни есть. Наркологическая клиника СПб — это когда врач приезжает сам. Потом выравнивают давление. Скорая…

  2. Помню, соседка рассказывала. Давление скакало. Наркологическая клиника СПб — Осматривает, ставит капельницу. Потом выравнивают давление. Врач наркологическая клиника СПб —…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed