"அடுத்த முதல்வர் திருமாவளவன் தான் என ஆதவ் பிரச்சாரம் மேற்கொள்ள சொன்னார், ஆனால் நான் தான்.!'- திருமா| thirumvalavn about alliance with dmk


விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் திமுகவுடான கூட்டணி குறித்து பேசியிருக்கிறார்.

” தொடர்ச்சியாக திமுகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே திமுகவுடனானக் கூட்டணியில் இருந்து சிலர் விசிகவை அகற்றப் பார்த்தனர்.

இதனை நான் எல்லோரிடமும் பகிரவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணனிடம் அவ்வப்போது சந்தித்த நெருக்கடிகளைப் பகிர்ந்துகொண்டேன். இந்தக் கூட்டணியை உடைப்பதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாகவும் வெளிப்படையாகவும் அவரிடம் கூறினேன்.

ஸ்டாலின் - திருமாவளவன்

ஸ்டாலின் – திருமாவளவன்

என்னை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கு விசிகவை டார்கெட் செய்து பிரசாரம் செய்தார்கள்.

ஆனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணி உடையக் கூடாது என்று விசிக உறுதியாக இருந்தது. இதெல்லாம் இன்று நம்மை விமர்சிக்கின்ற கும்பலுக்கு தெரியாது. நம்மோடு இருந்த ஆதவ் அர்ஜுனா அவர்கள் எப்படியெல்லாம் விசிகவை வளர்த்தெடுக்கப்போகிறோம் என்று நம் செயற்குழு கூட்டத்தில் பேசியிருந்தது நம் தோழர்களுக்கு தெரியும்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed