ஐ.பி.எல். 2024ன் 24வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சாஹல் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்கலாம். அதற்கு இவர் இன்றைய போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தியாக வேண்டும்.

உண்மையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம், சாஹல் ஐபிஎல்லில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை படைக்கலாம். இந்தப் போட்டியில் இதுவரை 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் சாஹல். இன்று குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாஹல் தனது விரல்களை சுழட்டி வித்தை காமித்தால், ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை எட்டிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார்.

இந்த ஐபிஎல்லில் யுஸ்வேந்திர சாஹல் இதுவரை:

நடப்பு சீசனில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், 11.12 என்ற சிறந்த சராசரியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை, சாஹல் தனது சுழற்பந்து வீச்சால் பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது வலையில் சிக்க வைத்து, வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சாஹல், நல்ல பார்மில் இருந்தார். இருப்பினும், 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இவர் இடம்பெறவில்லை. கடந்த 2023 ஐபிஎல்லில் 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசனிலும் அவர் தனது ஃபார்மை தொடர்ந்து அடித்தளமிட்டு வருகிறார்.

இதுவரை சாஹலின் ஐபிஎல் வாழ்க்கை:

2013 இல் அறிமுகமான யுஸ்வேந்திர சாஹல் இதுவரை ஐபிஎல்லில் 149 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் போட்டிகளில் 148 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 21.26 சராசரியில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் 7.64 என்ற எகானமியில் ரன்களை விட்டுகொடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் சாஹலும் ஒருவர்.

33 வயதான யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் 2022ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைவதற்கு முன், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

இதுவரை 149 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், 195 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 113 போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 35 போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்களை எடுத்துள்ளார். 2013ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ஒரே போட்டியில் விளையாடிய சாஹல், ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் எடுத்த பந்துவீச்சாளர்கள்:

யுஸ்வேந்திர சாஹல் (மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ்) – 149 போட்டிகளில் 195 விக்கெட்டுகள்.

பியூஷ் சாவ்லா ( பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்) – 185 போட்டிகளில் 181 விக்கெட்டுகள்.

அமித் மிஸ்ரா (டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) – 161 போட்டிகளில் 173 விக்கெட்டுகள்.

புவனேஷ்வர் குமார் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, புனே வாரியர்ஸ் இந்தியா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – 165 போட்டிகளில் 173 விக்கெட்கள்

ரவிசந்திரன் அஸ்வின் (சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்) – 201 போட்டிகளில் 172 விக்கெட்கள்

மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவரான ஷேன் வார்னேவின் 57 விக்கெட்களையும் முறியடிக்கும் வாய்ப்பும் சாஹலுக்கு உள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
calculadora apuestas sistema (http://www.estudiovirtual.es/) leganes betis
casa resultados De apuestas (https://www.castelldebalsareny.com/) apuestas con las mejores cuotas
cocorico darknet market cannaexpress shop
online sports Betting App Sports ny
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘தவிர்த்துகொள்ள வேண்டும்.!’- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?|Sengottaiyan spoke about MDMK; what was Durai Vaiko’s reaction? | ACTPnews.com

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா? | ACTPnews.com

குப்பை இருக்கும் இடம் தேடி… மதுரையை மாற்ற, களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் | Photo Album | ACTPnews.com

900 மாணவிகள்… மூன்றே கழிப்பறைகள்… தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக்கு கோரிக்கை | ACTPnews.com

Nepal Flood: உருக்குலைந்த நேபாளம்; பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு| live | Nepal flash flood live update | ACTPnews.com

tordex link black ops market