Who Is Thangavel Karur AIADMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata | Thangavel Profile: கரூர் அதிமுகவில் அடிமட்ட தொண்டரான தங்கவேலுக்கு அடித்த அதிர்ஷ்டம்

நாடாளுமன்றத் தேர்தலில் புதிய முகமான அருண் டெக்ஸ் தங்கவேல் அதிமுக சார்பாக கரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 
 

கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜய பாஸ்கர்
வருகின்ற  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி சார்பாக முதல் கட்டவேட்பாளர் பட்டியலை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக அலுவலகத்தில் வெளியிட்டார். அதன்படி அரசியலுக்கு எப்பவும் பஞ்சமில்லாத மாவட்டமாக திகழும் கரூர் மாவட்டத்தில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய முகமான அருண் டெக்ஸ் தங்கவேல் என்பவரை அதிமுக தலைமையின் சார்பாக வேட்பாளராக அறிவித்துள்ளனர். இவர் அதிமுகவில் கரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக தற்போது பொறுப்பில் வசிக்கிறார். மேலும் இவர் பாரம்பரிய அதிமுக கட்சியில் இருந்து பொறுப்பில் வசித்துள்ளார்.
மேலும் கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான தொழிலாக கருதப்படும் டெக்ஸ்டைல்ஸ் தொழில் இவரது பங்கு அதிக அளவில் உள்ளது. இவர் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. மேலும் இவர் தொழில் ரீதியாக விவசாயம் மற்றும் அருண் டெக்ஸ் என்ற பிக்சல்ஸ் நடத்தி வருவதுடன் முழுக்க முழுக்க தொழிற்சார்ந்த பல்வேறு பணிகளை ஈடுபட்டு வருகிறார். இவர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்ஆர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமாக என்பதால் இவருக்கு இந்த முறை முன்னாள் அமைச்சர் சிபாரிசில் இந்த சீட் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தொடர்ந்து அதிமுக கோட்டையாக முன்னாள் எம்பி தம்பிதுரை போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் கடந்த தேர்தலில் மக்களவைத் துணை சபாநாயகர் டாக்டர் மு தம்பித்துரை போட்டியிட்டார்.
 

 
அதை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜோதிமணி போட்டியிட்டார். அப்பொழுது ஜோதி மணிக்கு ஆதரவாக திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் களப்பணி ஆற்றியதால் அதிமுக வேட்பாளர் டாக்டர் மு.தம்பித்துரையை விட திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கோட்டையாக இருந்த நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கோட்டையாக மாறியது. அதை தொடர்ந்து தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளே போட்டி போட்டு வரும் நிலையில் அதிமுக புதிய முக வேட்பாளர் எந்த விதத்தில் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார் என சமூக நடுநிலைவாதிகள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக கரூர் பாராளுமன்ற தொகுதியில் தற்போது மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி கட்சியில் காங்கிரஸுக்கு,  கரூர் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் மீண்டும் அதிமுகவை நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் மூன்றாவது அணியாக கருதப்படும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும் கரூர் மாவட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில் நாதனும் இந்த பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

கரூர் அதிமுக கமலக்கண்ணன்
இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற தொகுதி கரூர் மாவட்டம் மட்டுமல்லாது புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் தற்போது வரை தமிழக அரசியலில் உதயசூரியன், இரட்டை இலை என்ற நிலையில் இல்லாமல் தற்போது புதிதாக மூன்றாவது அணியாக தாமரை என்ற சின்னமும் தமிழகத்தில் பெரும்பால இடங்களில் புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் வெள்ளப் போவது காங்கிரஸ் அதிமுகவா அல்லது பாஜகவா என கேள்விக்குறியாக உள்ளது. மேலும் தற்போதுள்ள காலை நிலவரம் எப்படி மூவரும் வாக்குகளை பிரிக்க தங்களது தேர்தல் பிரச்சாரத்தை  தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பாக 61 நபர்கள் அதிமுக தலைமையகத்தில் விருப்ப மனு அளித்திருந்தனர். அதில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், அதிமுக கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி , எம்ஜிஆர் மன்ற தங்கவேல் மற்றும் மல்லிகா சுப்பராயன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் தங்களது விருப்பம் மனு அளித்த நிலையில் தற்போது தங்கவேல் அவருக்கு லக் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

Source link