பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்க போகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.  ”வேலை தேடிப்போனியே என்னாச்சு” என மனோஜிடம் கேட்கிறார் விஜயா. மனோஜ் விஜயாவின் காதில் ரகசியமாக ஏதோ சொல்கிறார். அதைக்கேட்டு விஜயா அழுகிறார்.  ரோகினி வந்து, ”என்ன மனோஜ் என்ன வேலை கிடச்சிடுச்சா?” என கேட்கிறார். அதற்கு மனோஜ் ”என் படிப்புக்கும் டேலண்டுக்கும் ஏற்ற மாதிரி கனடாவுல வேலை கிடச்சிருக்கு” என சொல்கிறார். ”சூப்பர் மனோஜ் கங்ராட்ஸ்” என கூறி கைக்குலுக்கு கட்டிப்பிடிக்கிறார் ரோகினி. 
கனடாவில் வேலை:
”விசா எல்லாம் வர எப்டியும் ஒன் வீக் ஆகும் இல்ல” என்கிறார் ரோகினி. ”வேலை கிடச்சிட்டா ஒன் வீக்ல வந்துடும்” என்கிறார் மனோஜ். அதற்கு மீனா ”கிடச்சிட்டாவா? மாமா இவரு வேலை கிடச்சிடுச்சினு தானே மாமா சொன்னாரு என்கிறார் மீனா. ”ஒரு 14 லட்சம் கட்டுனா உடனே கன்பார்ம் ஆயிடும்” என்கிறார் மனோஜ். ”கவலைப்படாதப்பா கனடாவுக்கு போறேனு இவங்க தினமும் ஒரு கூத்து பண்ணதான் போறாங்க நாம சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்” என்கிறார் முத்து. இத்துடன் ப்ரமோ நிறைவடைகிறது. 
நேற்றைய எபிசோடில், தன் தந்தையின் நினைவு நாளை முடித்து விட்டு மீனா வீட்டிற்கு வருகிறார் ”எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?” என அண்ணாமலை கேட்கிறார். அப்போது முத்து அடித்தது குறித்து மீனா சொல்கிறார். விஜயா அண்ணாமலையிடம் முத்துக் குறித்து கிண்டலாக பேசுகிறார். ”அவன் ஆயிரம் பேசி இருந்தாலும் அதை கேட்டுக்கிட்டு சும்மா தாண்டா இருந்து இருக்கணும் ஏன்னா நீ பண்ண காரியம் அப்படி என முத்துவிடம் சொல்கிறார் அண்ணாமலை. 
முத்து – மீனா சண்டை:
”எங்க அப்பாவோட நினைவு நாளை கூட நாங்க நிம்மதியா பண்ணல, எல்லோரும் அழுதுக்கிட்டு  தான் இருந்தோம். இதை பார்த்து எங்க அப்பாவோட ஆத்மாவுக்கு ஒரு அமைதி இல்லாம தானே இருக்கும். என்ன பண்றது எங்கள யார் வேணாலும் அடிக்கலாம் திட்டலாம்னு ஆயிடுச்சு” என்று சொல்லி அழுகிறார் மீனா. ”என் கண்ணு முன்னாடி நிக்காத தள்ளுடா” எனக்கூறி விட்டு அண்ணாமலை கோபமாக செல்கிறார். பின் மீனாவும் முத்துவும் சண்டைப் போடுகின்றனர்.
மறுப்பக்கம் ஸ்ருதி ரவியிடம் ”என் அம்மா நம்ம ரெண்டு பேரும் சைக்கிள்ல போனத நெனச்சி ஃபீல் பண்ணி இருக்காங்க” என்கிறார். ஆலாப்புழா செல்வதற்கு ஒரு கூப்பன் இருப்பதாக கூறி ஸ்ருதி ரவியிடம் காண்பிக்கிறார். ஆனால் தன்னால் லீவு எடுக்க முடியாது என ரவி கூறுகிறார். 
முத்து மாடியில் தூங்க பாய் எடுத்துக் கொண்டு செல்கிறார். அங்கு ஏற்கனவே மனோஜ் இருக்கின்றார். ”ஹால்ல எனக்கு அனல் அடிக்குது” என கூறுகிறார் முத்து. இதனையடுத்து ரவியும் மாடிக்கு தூங்க வருகிறார். ”கல்யாணம் ஆகுற வரைக்கும் தான் நிம்மதி இருக்கும். ஆனதும் பஸ் ஏறி வெளியூர் போய்டும்” என்கிறார் முத்து. ”மேரேஜுக்கு முன்னாடியே லைஃப் நல்லாதாண்டா இருந்தது” என்கிறார் ரவி.  
 மீனா, ரோகினி, ஸ்ருதி 3 பேரும் கிச்சனில் சந்தித்துக் கொள்கின்றனர். மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் அப்டியே டோட்டலா சேஞ்ச் ஆயிடுறாங்க இல்ல” என்று ஸ்ருதி கூறியதுடன் எபிசோட் நிறைவு பெற்றது. 
 

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed