யஷ்


‘டாக்ஸிக்’ படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நேற்று (ஆகஸ்ட்.24) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய யஷ், “இந்த அன்பிற்கு நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இப்போது ‘என் ரத்தத்தில் ரத்தமான’ என்று சொல்லலாம் என்றால் அதை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார்.

‘என்னை வாழவைத்த தெய்வங்களே’ என்று சொல்லலாம் என்றால் தலைவர் ரஜினிகாந்த் சார் சொல்லிவிட்டார்.

யஷ்

‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்று சொல்லலாம் என்றால் தளபதி விஜய் சார் சொல்லிவிட்டார். அதனால், ‘என்னைத் தத்தெடுத்த தமிழ்மக்களே’ என்கிறேன்.

இந்தச் சமயத்தில் தமிழ் மக்களுக்கு நான் உண்மையிலேயே சல்யூட் செய்கிறேன். ‘ஜன நாயகன்’ படம் நெட்டில் லீக் ஆனபோது தயாரிப்பாளருக்கும், படக்குழுவினருக்கும் அது எவ்வளவு பெரிய வேதனை என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த தயாரிப்பாளருக்காகவும், விஜய் சார் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்காகவும், லீக் ஆன பிறகும் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்து உழைப்பை மதித்தீர்கள்.

சினிமாவையும் அதன் பின்னணியில் உள்ள உழைப்பையும் மதித்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

விஜய் சாரின் அர்ப்பணிப்பைப் பார்த்து பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

யஷ்
யஷ்

மக்கள் அவர் மீது முழு நம்பிக்கை வைத்து பொறுப்பைக் கொடுத்துள்ளனர். அவர் தமிழக மக்களுக்காகக் காட்டும் அர்ப்பணிப்பு அளப்பரியது.

மக்கள் கொடுத்த அன்பைத் திருப்பித் தரும் நிலைக்கு அவர் வந்திருக்கிறார். அவரது புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துகள். நாங்கள் சாதாரண மனிதர்கள்.

மக்கள்தான் எங்களை ஹீரோவாக ஆக்குகிறார்கள். அவர்களை மகிழ்விப்பது மட்டுமே எங்கள் கடமை. தொடர்ந்து மக்களை மகிழ்விப்போம்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. ООО «Ломбард Единство» https://lombard-edinstvo.ru – многопрофильная сеть ломбардов в Сочи, предоставляющий срочные займы под залог ювелирных изделий, техники, часов и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed