தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை:

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை,  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36.6  டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 31.8 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 32.6  டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு வட மாநிலங்களில் மட்டுமே பனிப்பொழிவு காணப்பட்டது. தமிழ்நாட்டில் இயல்பை விட குறைந்த அளவிலே பனிப்பொழிவு இருந்ததாக தனியார் வானிலை ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

17.02.2024 மற்றும் 18.02.2024: தென்தமிழக  கடலோரப்பகுதிகள்,    மன்னார்    வளைகுடா மற்றும் குமரிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Source link

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports