tiruvannamalai | திருவண்ணாமலை


என் மண் என் நாடு யாத்திரை  ராமேஸ்வரத்தில் துவங்கி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் 169 தொகுதியாக யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினர். கலசப்பாக்கம் தாலுக்கா அலுவலகம் எதிரே துவங்கி கலசப்பாக்கம் பேருந்து நிறுத்தம் வரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடந்து  செல்லும் வழியில் இருந்த பொதுமக்களை பார்த்து அவர்களின் கோரிக்கையை கேட்டு சென்றார். பாஜகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் நடந்து வந்தனர்.  
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில்;
யாத்திரை துவங்கிய நாளில் இருந்து ஒன்று மட்டும் புரிந்தது தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு உதவுகின்ற அரசு தமிழகத்தில் இல்லை என்று, அதிக அளவில்  தமிழகத்தில் படித்த இளைஞசர்கள் உள்ளனர். படிப்புக்கேத்த ஊதியமும், படிப்புக்கேத்த வேலையும் தமிழகத்தில் இல்லை, ஒருபக்கம் விவசாயதுக்கு தண்ணீர் பிரச்னை விவசாயம் பார்க்க முடியவில்லை. இதற்காக தமிழக அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றொரு பக்கம் தமிழகத்தில் ஏழை மக்கள் தலைமுறை தலைமுறையாக உள்ளனர். எங்கு பார்த்தாலும் ஏழை மக்கள் உள்ளனர்.  என் மண் என் நாடு யாத்திரை தமிழகத்தில் புதியமுறையில் அரசியல் கொண்டு வரவேண்டும், இந்த அரசியலில் ஜாதி மதத்திற்கு இடம் கிடையாது, அடாவடி தனத்திற்கு இடம் கிடையாது, குடும்ப அரசியலுக்கு இடம் கிடையாது. அப்படிப்பட்ட அரசியலை தமிழக மக்களுக்கு கொண்டு வரவேண்டும். உங்களுடைய குழந்தைகள் நல்லவொரு தமிழ் நாட்டில், வளர்ந்து வரும் நாட்டில் வளர வேண்டும்  என்ப்தாற்காக அணைத்து இடங்களிலும் என் மண் என் நாடு யாத்திரை நடத்தி வருகிறோம்.
 

 
கலசப்பாக்கம் தொகுதி பொருத்த வரையில் பருவத்த மலையில் எல்லாராலும் ஏறிட முடியாது மிகவும் பக்தியுடன் உள்ளவர்கள் மட்டுமே ஏறிட முடியும் , இந்தியாவில் உள்ள கைலாயம் போக முடியாதவர்கள் பருவதமலை சுற்றி கிரிவலம் வந்தால் கைலாயத்தில் கிடைக்கக்கூடிய அருள் பருவதமலையில் கிடைக்கும். வருகின்ற பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு நான் ஜவ்வாது மலைக்கு வருவேன்,  தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் இல்லாமல் உள்ளது தனியார் பள்ளியில் கிடைக்கிற கற்றல் திறன் அரசு பள்ளியில் இல்லை, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி தமிழக அரசு  மூடும் விழா நடத்தி வருகிறது. 2022 மத்திய அரசின் ஆய்வு அறிக்கையில் தமிழ்நாட்டில் 11711 பள்ளி வகுப்பறைகள் குறைவாக உள்ளது. இங்கு உள்ள தாய்மார்கள் அனைவரும் மிகவும் வறுமையில் உள்ளனர். கூலி வேலைக்கு சென்றால் தான் அவர்களுடைய  வீட்டில் அடுப்பு எரியும் அவலம் இங்கு உள்ளது.  உலகத்தரம் வாய்ந்த கல்வியை பணமின்றி தர பாரத பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அத்தகைய கல்வியை தமிழக அரசு தமிழகத்தில் கொண்டுவர முடியாமல் தடுத்து வருவதாகவும், மத்திய அரசின் சார்பில்  நடத்தப்பட்டு வரும் நவோதயா உள்ளிட்ட பள்ளிகளை கொண்டுவர தமிழக அரசு தடுத்து வருகிறது.  நவோதயா பள்ளிக்கூடத்தை ஜவ்வாது மலைக்கு கொண்டுவருவதற்கும் சிரமம்  உள்ளது.
 

 
மத்திய அரசின் எந்தவொரு பள்ளிகள் வருவத்றகு இங்கு உள்ள அரசியல் வாதிகள் தடுத்து வருகின்றனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி pmc என்ற திட்டத்தின் மூலம் இந்திய முழுவதும் 16 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் 18 ஆயிரத்தி 128 கோடி ரூபாயில் வழங்குவதற்கு தயாராக உள்ளார். ஆந்திர மாநிலத்தில் 668 pmc பள்ளிகள், கர்நாடக 129 பள்ளிகள், தெலுங்கானாவில் 543 பள்ளிகள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில்  பள்ளிகூடங்கள் வேண்டாம் என தமிழக அரசு கூறியுள்ளனர். இதன் மூலம் பணக்காரர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி என்ற வகையில் தான் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும், இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் இதனால் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெற வேண்டும் அதன்பிறகு ஜவ்வாது மலை உள்ளிட்ட மற்ற பகுதியில் உலகம் தரம் வாய்ந்த பள்ளிகள் கொண்டுவந்து ஏழை, எளிய மக்களின் மகன், மகள் இந்த சமுதாயத்தில் முக்கிய நபராக கொண்டுவர முடியும் என்பதை மாற்றி காட்டுவோம்.
 

திமுக ஆட்சிக்கு வந்து 31 மாதங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு  சொந்த கட்டிடம் கட்டினால் மட்டுமே அதை திறப்பதற்காக மட்டுமே திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதலமைச்சர் வந்துள்ளதாகவும், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் எந்த கட்டிடத்தையும் திறக்கவும் திடத்தை அளிக்கவும்  முதலமைச்சர் திருவண்ணாமலைக்கு வந்ததில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டு, அமைச்சர் எ.வ.வேலு திமுகவின் ஏடிஎம் வேலு, திமுகவுக்கு ஏடிஎம் இருப்பதாக இருந்தால் அது எ.வ.வேலு மக்கள் பணத்தை வரி பணத்தை எல்லாம் கொள்ளை அடித்து கண்முன்னே வளர்ந்து வருகிறார். நடத்துனராக இருந்து சம்பளம் வாங்கி இருந்தாலும்  அமைச்சர் எ.வ.வேலு 7 ஆயிரம் கோடி சொத்து வைத்துள்ளார். இப்படி இருந்தால் மாவட்டம் ஏற்பாடி முன்னேறும் அவர் முன்னேறி சென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அவருடைய கல்லூரியில் புதிய கட்டிடங்கள் கட்டி வருகிறார். ஆனால் ஜவ்வாது மலை ஏழை மக்களுக்கு இல்லை. விவசாய நிலத்தை நாங்கள் தரமாடோம் என கூறிய விவசாயிகள் மீது குண்ட சட்டத்தை செலுத்தி கைது செய்யும் அரசாக தமிழக அரசு உள்ளது.
 

இதற்கு எ.வ.வேலு விவசாயி மீது போட்ட  குண்டாஸ் தெரியாது என கூறுகிறார். பினாமிகளை வைத்துக்கொண்டு பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வேலு வாங்கி வருகிறார். இந்தியா பல்வேறு வகையில் முன்னேறி கொண்டு வருகிறது. மேலும் பல முன்னேற்றங்கள் அடைய வேண்டும் என்றால் மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும்  மலைவாழ் மக்களுக்கு இலவச வீடுகள் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது பல்வேறு திட்டங்களுக்கு பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை இந்தியா முழுவதும் பாரத பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு திட்டங்கள் தான் அவற்றை ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு தனது திட்டங்களாக செயல்படுத்தி வருகிறது எனப் பேசினார். 

மேலும் காண

Source link