Tamil Nadu latest headlines news till afternoon 21st march 2024 flash news details here | TN Headlines: அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! 32 தமிழக மீனவர்களை கைது



G Premkumar Profile: தி.மு.க.வின் முக்கிய தலை டி.ஆர்.பாலுவை, எதிர்க்கும் டாக்டர்..! யார் இவர் ? – துளிர்க்குமா இரட்டை இலை ?

திராவிட முன்னேற்றக் கழகத்தின்  மிக முக்கிய தலைவர்களின் ஒருவராக இருக்கும் டி. ஆர் .பாலு ஸ்ரீபெரும்புதூர் மீண்டும் இத்தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை  அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த அவர், அதே நம்பிக்கையில் இம்முறை போட்டியிடும் நிலையில் தற்பொழுது, அதிமுக  சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க

Fishermen Arrest: அதிர்ச்சி! – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இருவேறு சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று பிற்பகல் சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நிலையில் 32 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. மேலும் படிக்க

ED Raid: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 4 கார்களில் வந்த 8 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் படிக்க

TN Rain Alert: இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வெயில் எப்படி இருக்கும்? இன்றைய நிலவரம் என்ன?

தமிழகத்தில்   ஓரிரு   இடங்களில்    அதிகபட்ச    வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும்,  இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

Lok Sabha Election 2024: அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – யாருக்கெல்லாம் இடம்?

இன்று 17 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுக மற்றும் அதிமுக நேரடியாக 18 தொகுதிகளில் மோதுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றபின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அதிமுகவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் மக்களவை தேர்தலில் அதிமுகவில் புதுமுகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண

Source link