Tag: நினைத்தேன் வந்தாய் அப்டேட்

• zee tamil ninaithen vanthai serial april 1st episode update | Ninaithen Vanthai :சுடரை வளைத்து பிடித்த வேலு! எழிலை விரட்டி விடும் மனோகரி

zee tamil ninaithen vanthai serial april 1st episode update | Ninaithen Vanthai :சுடரை வளைத்து பிடித்த வேலு! எழிலை விரட்டி விடும் மனோகரி

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சுடர் காய்ச்சலில் தவிக்க எழில் அவளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து பார்த்து கொண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
எழில் ஆறுதல்:
அதாவது, மறுநாள் காலையிலும் சுடருக்கு காய்ச்சல் குறையாததால் எழில் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறான், இதை சமையல்காரி செல்வி பார்த்து விடுகிறாள். உடனே அவள் மனோகரியிடம் விஷயத்தை சொல்ல அவள் டென்சன் ஆகிறாள்.
ஹாஸ்பிட்டலுக்கு வந்த எழில் சுடருக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து அவளை பக்கத்தில் இருந்தே பார்த்து கொள்கிறான், சுடர் காய்ச்சலில் பயப்பட அவளை பக்கத்தில் இருந்த எழில் பயப்படாதீங்க, தமிழ் நான் பக்கத்தில் தான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்கிறான். மறுபக்கம் வேலு சுடரை தேடி ஹாஸ்பிடலுக்கு வர முடிவெடுக்கிறான்.
துரத்தும் மனோகரி:
அடுத்ததாக மனோகரி ஹாஸ்பிடலுக்கு வந்து எழிலிடம் நீங்க போங்க எழில் நான் சுடரை பார்த்துக்கறேன் என்று பேசி அவனை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறாள். எழில் வெளியேறியதும் மனோகரி சுடரிடம் சென்று அதான் காய்ச்சல் போய்டுச்சுல நீயும் கிளம்பு என துரத்தி விடுகிறாள்.
இதையடுத்து சுடர் வீட்டிற்கு கிளம்பி வர வேலு ஹாஸ்பிடலுக்கு வர சுடரை பார்த்து விடுகிறான், உடனே அவளை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் காண

Source link

• zee tamil ninaithen vanthai serial february 20th episode update | Ninaithen Vanthai:மீண்டும் எழிலுக்கு பாட்டிலில் விழுந்த அடி.. குழந்தைகளால் சிக்கிய சுடர்

zee tamil ninaithen vanthai serial february 20th episode update | Ninaithen Vanthai:மீண்டும் எழிலுக்கு பாட்டிலில் விழுந்த அடி.. குழந்தைகளால் சிக்கிய சுடர்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராமையா சுடரை எழிலுக்கு அறிமுகம் செய்ய கூப்பிட அவளும் பயந்து நடுங்கி வெளியே வர எழிலுக்கு போன் கால் வந்து விடுவதால் அவன் எழுந்து சென்று விடுகிறான்.
இதனைத் தொடர்ந்து எழிலிடமிருந்து தப்பித்த சுடர் குழந்தைகளை ஸ்கூலுக்கு கூட்டி வந்து விடுகிறாள். அடுத்து ஒரு கடையில் கோலிசோடா குடித்துக் கொண்டிருக்கும் போது திருடன் ஒருவன் ஒரு பெண்மணியின் பேக்கை திருடி கொண்டு ஓட சுடர் கையில் இருக்கும் பாட்டிலை வீச அது மீண்டும் தலையில் போய் விழுகிறது.
இதனால் பதறிப் போகும் சுடர் அதிர்ச்சி அடைகிறாள். குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் அவர்களை படிக்க சொல்ல அவர்கள் கடைபிடிக்க இல்லனா உங்க டாடி கிட்ட சொல்லிடுவேன் என்று மிரட்டி படிக்க வைக்கிறாள். இதனால் கடுப்பான குழந்தைகள் சுடரை படித்திருக்க பிளான் போட்டு பேய் வேஷம் போட்டு பயமுறுத்துகின்றனர்.
கழுத்தை நெரித்ததும் பயந்து போய் சுடர் வெளியே ஓடி வர எழிலும் சத்தம் கேட்டு வெளியே வர சுடர் பேய்க்கு பயந்து எழிலை கட்டிப்பிடித்துக் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க
RV Udhayakumar: நிறைய காட்றாங்க .. பெண்களின் ஆடை குறித்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சர்ச்சை பேச்சு!
Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு – ரசிகர்கள் இரங்கல்!

மேலும் காண

Source link

• zee tamil ninaithen vanthai serial february 14th episode update | Ninaithen Vanthai :எழில் வீட்டு வந்த சுடர்.. டார்ச்சர் செய்ய ஸ்கெட்ச் போடும் குழந்தைகள்

zee tamil ninaithen vanthai serial february 14th episode update | Ninaithen Vanthai :எழில் வீட்டு வந்த சுடர்.. டார்ச்சர் செய்ய ஸ்கெட்ச் போடும் குழந்தைகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் கோவிலுக்கு போயிட்டு எழில் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ராமையா சர்டிபிகேட்டுடன் வந்துட்டியா என்று கேட்க சுடர் கொண்டு வந்திருப்பதாக சொன்னதும் அவளை உள்ளே அழைத்து வர கனகவள்ளி நீ குழந்தைகளை நல்லபடியாக பார்த்துப்பேன்னு நம்புறேன் என்று வேலைக்கு எடுத்து கொள்வதாக சொல்கிறாள்.
அதன் பிறகு காபி கொடுக்க சுடர் காபியோட நிறுத்திடுவாங்க போலயே, எனக்கு வேற பயங்கரமா பசிக்குதே என்று யோசிக்கிறாள், பிறகு செல்வி சுடருக்கு ரூமை காட்ட அதை பார்த்து இவ்வளவு பெரிய ரூமா? நான் மட்டும் தான் படுத்து தூங்க போறானா? என மெய் சிலிர்த்து போகிறாள். அடுத்து அவளுக்கு அப்பா சொன்ன விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்து போகிறது.
ராமையா அங்கு வர அவரின் பெயரை கேட்டதும் கலாய்த்து பாட்டு பாடி ஆட்டம் போடுகிறாள், இந்த வேலையை கொடுத்த கனகவல்லி மேடம்க்கு நன்றி சொல்லணும் என்று சுடர் சொல்ல உன்ன ரெகமெண்ட் பண்ணது குழந்தைங்க தான் என்று சொல்ல குழந்தைகள் சுடரை டார்ச்சர் பண்ணனும், கொஞ்ச நேரம் ஆனதும் நம்ம வேலையை ஸ்டார்ட் பண்ணிடனும் என்று பிளான் போடுகின்றனர்.
பிறகு சுடர் குழந்தைகளுக்கு நன்றி சொல்லி என்மேல உங்களுக்கு அவ்வளவு பாசமாக என்று கேட்க குழந்தைகள் ஆமாம் என்று நக்கலாக சொல்கின்றனர், பிறகு உங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்க கூடாது தான் சாரி எனவும் சொல்கிறாள். பிறகு மனோகரி எழில் போட்டோ முன்பு நின்று எதையோ பேசி கொண்டிருக்க எழில் அங்கு வந்து விட சமாளித்து வெளியே வருகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Valentine’s Day: காதல் கல்யாணத்துல இருக்கும் மைனஸ்.. வெளிப்படையாக பேசிய சரண்யா பொன்வண்ணன்!
Valentine’s Day: பள்ளியில் மட்டும் 3 காதல்கள்.. சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நிலையா?

மேலும் காண

Source link

• Ninaithen Vanthai : மாட்டிக்கொண்ட பிள்ளைகள்.. எழில் கொடுத்த தண்டனை : நினைத்தேன் வந்தாய் எபிசோட் அப்டேட்

Ninaithen Vanthai : மாட்டிக்கொண்ட பிள்ளைகள்.. எழில் கொடுத்த தண்டனை : நினைத்தேன் வந்தாய் எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் நினைத்தேன் வந்தாய்.

இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் குழந்தைகள் மூவரும் ராமையாவுடன் சேர்ந்து பார்க்குக்கு சென்று விளையாடிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க…

அதாவது குழந்தைகள் எல்லோரும் பலூன் உட்பட விளையாட்டு பொருட்களுடன் வீட்டிற்கு வர எழிலின் கார் வெளியே நிற்பதை பார்த்து ஷாக்காகின்றனர். உடனே அபி எல்லாரும் ஸ்கூலுக்கு தான் போயிட்டு வந்ததாக பொய் சொல்லணும் அழுது மாட்டிக்க கூடாது என்று சொல்லி வீட்டிற்குள் கூட்டிச்செல்கிறாள்.

பிறகு எழில் இடம் சாதாரணமாக பேசிவிட்டு மேலே செல்லும் போது எனில் மூன்று பேரையும் கூப்பிட்டு எங்க போயிட்டு வர்றீங்க என்று கேட்க ஸ்கூலுக்கு தான் போயிட்டுவரும் டாடி என கோரசாக பொய் சொல்கின்றனர். டிரஸ் எல்லாம் எதுக்கு அழுக்கா இருக்கு என்று கேட்க ஸ்போர்ட்ஸ் டே அதனால பிராக்டிஸ் போயிருந்தோம் என்று பொய் சொல்கின்றனர்.

நான் 100 மீட்டர் ரன்னிங் போயிருந்தேன் ஆயிரம் மீட்டர் ரன்னிங் போய் இருந்தேன் என்று அளந்து விட எழில் அப்படின்னா ஒரு சப்ரைஸ் என்று சொல்லி மூவரையும் கூட்டிக்கொண்டு ஒரு கிரவுண்டுக்கு வந்து அவர்களை ஓடவிட்டு பனிஷ்மென்ட் கொடுக்கிறான்.

மறுபக்கம் ஊரிலிருந்து தப்பிய சுடர் ஒரு பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து இருந்த பெண் தனது பேக்கை பஸ்லையே வைத்துவிட்டு பாதியில் இறங்கி விடுகிறாள். சுடர் அந்த பேக்கை எடுத்து பார்க்கையில் அதற்குள் சர்டிபிகேட் உள்ளிட்டவை இருக்கிறது.

இந்த நேரத்தில் அந்த பெண்ணின் போன் ரிங்காக இந்த பக்கம் சுடரும் அந்த பக்கம் எழிலும் பேசுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Source link