Tag: நிதிஷ் குமார்

• நிதிஷ் குமாரை பின்னுக்கு தள்ளிய பாஜக.. தொகுதி பங்கீடு ஓவர்.. பீகாரில் மிஷன் ரெடி!

நிதிஷ் குமாரை பின்னுக்கு தள்ளிய பாஜக.. தொகுதி பங்கீடு ஓவர்.. பீகாரில் மிஷன் ரெடி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் தொடங்க உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எதிர்பார்ப்பை எகிற வைத்த நாடாளுமன்ற தேர்தல்:

மக்களவை தேர்தலை தவிர, ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்த நிலையில், பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பதால் பீகாருக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வந்தது.

பீகாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாஜக:

இதனால், பீகாரில் கூட்டணியை பலப்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தங்கள் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து, லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

இதனை தொடர்ந்து, மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதுமட்டும் இன்றி, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் கட்சியை கூட்டணியில் கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்தது.

இப்படிப்பட்ட சூழலில், பீகாரில் பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜகவும் 16 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிடுகிறது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிகார் முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்.எல்.ஏ.எம். கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை, பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் சமமான தொகுதிகளில் போட்டியிட்டு வந்தது.

ஆனால், இந்தமுறை, முதல்முறையாக நிதிஷ் குமார் கட்சியை விட கூடுதலாக ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது பாஜக. கடந்த தேர்தலில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளில் போட்டியிட்டது. லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

• BIhar cm nitish kumar praises interim budget as positive | Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார்

BIhar cm nitish kumar praises interim budget as positive | Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார்

Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, பீகார் முதலமைச்ச்ர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட்டை பாராட்டிய நிதிஷ்குமார்:
பாஜகவை வீட்டிற்கு அனுப்புவோம் என்ற முழக்கத்துடன், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியவர்களில் நிதிஷ்குமாருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக கடந்த வாரம், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். மேலும், பரம எதிரி என கூறிய பாஜக உடனே சேர்ந்து, மீண்டும் ஆட்சி அமைத்து முதலமைச்சரானார். இது தேசிய அரசியலில் பெடும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தான், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, நிதிஷ்குமார் பாராட்டியுள்ளார்.
செயல்திறன் அதிகரிக்கும் – நிதிஷ் குமார்:
இதுதொடர்பாக பேசிய நிதிஷ் குமார், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் நேர்மறையானது மற்றும் வரவேற்பதற்கு தகுதியானது.  மூன்று புதிய பொருளாதார வழித்தடங்கள் அமைக்கும் முடிவு பாராட்டுதலுக்குரியது.  இவை தளவாட செயல்திறனை கொண்டு வருவதோஉட்,  நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும்.
நடுத்தர வகுப்பினருக்காக சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வரப்படும் அரசின் முடிவு வரவேற்கத்தக்க நடவடிக்கை. இதன் மூலம், வாடகை வீடுகள் மற்றும் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு பலன்கள் கிடைக்கும். மேலும், தொழில் வளர்ச்சி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வரிப் பிரிவில் ஓராண்டு விலக்கு அளிக்கப்படுவது தொழில் வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். MNREGA பட்ஜெட் அதிகரிப்பு கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். பட்ஜெட்டில் உயர்கல்விக்கான கடன் தொகை உயர்த்தப்பட்டு, இளைஞர்களுக்கு நன்மை பயக்கும்” என நிதிஷ் குமார் பாராட்டியுள்ளார். இதனிடையே, பீகார் மாநிலத்தின் பட்ஜெட் கூடத்தொடர், பிப்ரவரி 10ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெலிகிராம் யூஸ் பண்றீங்களா? ஜாக்கிரதை – குறுஞ்செய்தியை நம்பிய பட்டதாரி வாலிபருக்கு நேர்ந்த கொடுமை
எதிர்க்கட்சிகள் விமர்சனம்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உள்ளிட்ட எந்தவித சலுகைகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக விமர்சித்துள்ளது. இதேபோன்று, பல்வேறு எதிர்க்கட்சிகளும் பட்ஜெட்டில்  விரிவான அறிவிப்புகள் எதுவுமில்லை என சாடி வருகின்றன. இந்நிலையில் தான், கடந்த வாரம் வரை பாஜகவை வீழ்த்துவோம் என பேசி வந்த நிதிஷ்குமார், தற்போது பட்ஜெட்டை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link

• Political Strategist Prashant Kishor Attack On Nitish Kumar Bjp Rjd Again Perdict For Bihar Cm | Prashant Kishor: ”எழுதி வச்சிக்கோங்க” – வட்டியுடன் நிதிஷ் குமாருக்கு திருப்பி தரப்படும்

Political Strategist Prashant Kishor Attack On Nitish Kumar Bjp Rjd Again Perdict For Bihar Cm | Prashant Kishor: ”எழுதி வச்சிக்கோங்க” – வட்டியுடன் நிதிஷ் குமாருக்கு திருப்பி தரப்படும்

Prashant Kishor: பீகார்ல் நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி தொடர்பாக அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் கருத்து, இணையத்தில் வைரலாகியுள்ளது.
நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி:
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை பதவியை ராஜினாமா செய்து, இரண்டு முறை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அடுத்தடுத்து கூட்டணியை மாற்றி வரும் நிதிஷ் குமாரின் நடவடிக்கைகளை I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

#WATCH | Begusarai: On On JDU Chief Nitish Kumar resigning as the CM of Bihar and JD(U)-BJP alliance, Prashant Kishor, Poll Strategist says, “I have been saying this since starting that Nitish Kumar can swap anytime. This has become a part of his politics… He is a ‘paltumaar’.… pic.twitter.com/V7LR9rcJ71
— ANI (@ANI) January 28, 2024

”பாஜக – நிதிஷ் கூட்டணி நீடிக்காது”
பாஜக – நிதிஷ் கூட்டணி தொடர்பாக அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரும் காட்டமாக பேசியுள்ளார். அதன்படி, ”அடுத்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், நான் எனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பீகார் மக்கள் நிதிஷ் குமாருக்கு வட்டியுடன் திருப்பித் தருவார்கள். தற்போதைய சூழலில் பீகாரில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒருபுறம், நிதிஷ் குமாரை முகமாக கொண்ட பாஜகவால் ஆதரிக்கப்படும் கூட்டணி,  மறுபுறம் ஆர்ஜேடி உள்ளிட்ட பிற கட்சிகள். இதே சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் நடக்காது. அடுத்த பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன், பல அதிரடியான முன்னேற்றங்கள் நிகழும். மக்களவை தேர்தலுக்குப் பிறகு, ஆறு மாதங்களுக்குள், அந்த முன்னேற்றங்களை காண்பீர்கள். ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான நிதிஷ் குமாரின் கூட்டணி நீடிக்காது, எப்போது வேண்டுமானாலும் தனது கூட்டணியை மாற்றுவார் என பல மாதங்களாக கூறி வருகிறேன். அவரது அரசியலில் இது ஒரு அங்கமாக உள்ளது. ஆனால், இது தற்போது பாஜகவிற்கும் பொருந்தியுள்ளது. பல்வேறு விவகாரங்களில் நிதிஷ்குமாரை  குற்றம்சாட்டி வந்த பாஜக, தற்போது அவருக்கு ஆதரவளித்து முதலமைச்சராக்கியுள்ளது. எனவே, 2025ம் ஆண்டு தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் பெரும்பான்மையை கைப்பற்றும்” என பிரசாந்த் கிஷோர் ஆவேசமாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ஆரம்பத்தில் இருந்தே நிதிஷ் பிரச்னைதான்; அவர் போனதால் I.N.D.I.A கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை – டி.ஆர். பாலு

Source link

• Nitish Kumar Taken Oath As Bihar Cm Timeline Of His Political U Turns With Bjp Rjd | Nitish Kumar: பீகார் அரசியல்

Nitish Kumar Taken Oath As Bihar Cm Timeline Of His Political U Turns With Bjp Rjd | Nitish Kumar: பீகார் அரசியல்

Nitish kumar: பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார், இதுவரை அரசியல் கூட்டணியில் எடுத்துள்ள தடாலடி மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மீண்டும் முதலமைச்சரான நிதிஷ் குமார்:
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இது தேசிய அரசியல்  வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை பதவியை ராஜினாமா செய்து, இரண்டு முறை மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இப்படி திடீர் திடிரென கூட்டணியை முறித்துக் கொள்வது என்பது நிதிஷ்குமாருக்கு புதியதல்ல. அப்படிபட்ட முடிவுகளால் கடந்த 24 ஆண்டுகளில் 9 முறை நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அடிக்கடி கூட்டணியை மாற்றுவதால் இவரை பல்டிமார் என விமர்சிப்பதும் உண்டு. அந்த வகையில் கடந்த காலங்களில் அவர் எடுத்த பல தடாலடியான முடிவுகள் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2000 : ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாஜக ஆதரவுடன் மார்ச் 3, 2000 அன்று நிதிஷ்குமார் முதல் முறையாக முதலமைச்சரானார். ஆனால், ஏழு நாட்கள் மட்டுமே அவர் ஆட்சி நீடித்தது. 2003 ஆம் ஆண்டில், நிதிஷ் குமார் ஷரத் யாதவுடன் சேர்ந்து ஐக்கிய ஜனதா தளத்தை உருவாக்கினார்.
நவம்பர் 2005: நிதிஷ்குமார் பாஜக ஆதரவுடன் 2005ம் ஆண்டில் பீகார் முதலமைச்சராக பதவியேற்று ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
நவம்பர் 2010: மீண்டும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார், ஆனால் இந்த முறை அவரது ஆட்சி மே 19, 2014 வரை வெறும் 3.5 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2013 இல் அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராஅக் முன்னிறுத்தப்பட்டபோதை எதிர்த்து,  NDA உடனான 17 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொண்டார்.
பிப்ரவரி 2015:  RJD மற்றும் காங்கிரஸுடன் கைகோர்த்து, 2015 இல் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சரானார். இருப்பினும், அவர் 2017 இல் கூட்டணியை முறித்துக் கொண்டார். ஆனாலும், மீதமிருந்த 8 மாத ஆட்சிக் காலத்தை அவரது அரசு பூர்த்தி செய்தது.
நவம்பர் 2015 : ஆர்ஜேடியின் உதவியுடன் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார். அந்த அரசாங்கம் 1 வருடம் 8 மாதங்கள் மட்டுமே நீடித்தது.
ஜூலை 2017 : பாஜக உதவியுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இம்முறை அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள், 3 மாதங்கள் மற்றும் 2 வாரங்கள் நீடித்தது.
நவம்பர் 2020: சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார். இம்முறை இந்த கூட்டணியின் ஆட்சி ஆகஸ்ட் 2022 வரை நீடித்தது.
ஆகஸ்ட் 2022: பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் RJD மற்றும் காங்கிரஸ் உதவியுடன் பீகார் முதலமைச்சரானார் நிதிஷ் குமார். துணை முதலமைச்சராக ஆர்ஜேடி தலைவரான தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இந்த ஆட்சி  ஜனவரி 28, 2024 வரை நீடித்தது. அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரத்திலேயே, நேற்று மீண்டும் பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்றார்.

Source link

• Bihar Chief Minister Nitish Kumar Has Sought Time To Meet The Governor Amid Bjp Side Switch Rumoursources

Bihar Chief Minister Nitish Kumar Has Sought Time To Meet The Governor Amid Bjp Side Switch Rumoursources

Nitish Kumar: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக மீண்டும் பதவியேற்பார் என கூறப்படுகிறது.
கூட்டணி மாறும் நிதிஷ் குமார்:
பீகாரில் பாஜக உடன் சேர்ந்து ஆட்சி செய்து வந்த நிதிஷ்குமார், கடந்த 2022ம் ஆண்டு அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார். தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில். நிதிஷ்குமார் மீண்டும் பாஜக பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும், பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Bihar Chief Minister Nitish Kumar has sought time to meet the Governor today morning: Sources
— ANI (@ANI) January 28, 2024

பாஜக ஆதரவில் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ் குமார்?
வெளியாகியுள்ள பல்வேறு தகவல்களின்படி, “நிதிஷ்குமார் இன்று பீகார் ஆளுநரை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அதேநேரம், அடுத்த சில மணி நேரங்களிலேயே பாஜகவின் ஆதரவுடன் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க உள்ளார். இதற்காக இன்று மாலை ஆளுநரை சந்திக்க, நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளார்” என கூறப்படுகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சென்று சந்தித்து, I.N.D.I.A. கூட்டணி உருவாக முக்கிய பங்கு வகித்தார். ஆனால், தற்போது அவர் மீண்டும் பாஜக உடனே கூட்டணி அமைக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவையில் மாற்றம்?
நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,   கூட்டணியில் உள்ள ஒவ்வொரு நான்கு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் விகிதம், பாஜகவிற்கு பதவி வழங்க வேண்டும். அதாவது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் வகித்து வரும் அமைச்சர் பதவிகள் பாஜகவினருக்கு வழங்க வேண்டும். இரண்டு முதலமைச்சர்கள் உடன் சபாநாயகர் பதவியையும் பாஜகவை சேர்ந்த நபருக்கு ஒதுக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு தேர்தலில் 12-15 தொகுதிகள் மட்டுமே நிதிஷ்குமார் கட்சிக்கு ஒதுக்கப்படும்” ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது. இதனிடையே, துணை முதலமைச்சராக சுஷில் மோடியை பாஜக தேர்வு செய்ய வேண்டும் என, நிதிஷ்குமார் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி மாறுவது ஏன்?
தான் முன்னின்று உருவாக்கிய எதிர்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் தான், நிதிஷ்குமார் மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ஜனநாயகத்தை காக்க நினைப்பவர்கள் அவசரப்பட்டு மனம் மாறக்கூடாது என, நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதே போன்று, நிதிஷ் குமார் I.N.D.I.A. கூட்டணியில் இருந்து வெளியேறக் கூடாது என, அகிலேஷ் யாதவும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

• Lok Sabha Election 2024 Nitish Kumar JDU Asserted INDIA Alliance But Wanted Congress Introspection Seat Sharing | Lok Sabha Election 2024: ”I.N.D.I.A. கூட்டணியில் தான் இருக்கோம், ஆனால்…”

Lok Sabha Election 2024 Nitish Kumar JDU Asserted INDIA Alliance But Wanted Congress Introspection Seat Sharing | Lok Sabha Election 2024: ”I.N.D.I.A. கூட்டணியில் தான் இருக்கோம், ஆனால்…”

Nitish kumar: காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என,  பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
பாஜகவுடன் நிதிஷ்குமார் கூட்டணி?
நிதீஷ் குமார் பீகார் முதலமைச்சராக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏழாவது முறையாக, அதுவும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். இந்நிலையில், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி, மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
I.N.D.I.A. கூட்டணியில் இருக்கிறோம், ஆனால் காங்கிரஸ்?
இந்நிலையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவரான உமேஷ் சிங் குஷ்வஹா, பாட்னாவில் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”ஐக்கிய ஜனதா தளம் கட்சி I.N.D.I.A. கூட்டணியில் உறுதியாக உள்ளது. ஆனால் கூட்டணிக் கட்சிகள்  உடனான உறவு மற்றும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான ‘மகாத்பந்தன்’ கூட்டணியில் எல்லாம் நன்றாக இருக்கிறது.  உள்நோக்கத்துடன் சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.   நேற்றும் இன்றும் முதலமைச்சரை சந்தித்தேன். இது வாடிக்கையான விஷயம். பரவும் வதந்திகளில் உண்மை இல்லை. கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாட்னாவுக்கு விரைந்து வர அழைப்பு விடுத்ததாக வெளியான வதந்திகளையும் நிராகரிக்கிறோம்” என உமேஷ் சிங் குஷ்வஹா விளக்கமளித்துள்ளார்.

#WATCH | Patna: On whether Nitish Kumar will go with NDA, RJD leader Shivanand Tiwari says, “…I can never imagine that Nitish Kumar will return (to NDA). How does he want history to remember him? How can he take such a step when even the BJP’s office peon has also said that the… pic.twitter.com/5Che3xDbka
— ANI (@ANI) January 26, 2024

ராஷ்டிரிய ஜனதா தளம் ஆலோசனைக் கூட்டம்:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி மாறும் தகவல்களுக்கு மத்தியில், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, தேஜஸ்வி யாதவ், முக்கிய எம்.எல்.ஏக்களை அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். நிதிஷ் குமார் தொடர்பாக பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான சிவானந்த் திவாரி பேசுகையில், ”நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்கு திரும்புவார் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வரலாறு அவரை எப்படி நினைவில் வைத்திருக்க வேண்டும்? பிஜேபி அலுவலகத்தில் நிதிஷ்குமாருக்கான கதவுகள் மூடப்பட்டு விட்டதாக, அந்த அலுவலக  பியூன் கூட சொன்ன பிறகு அவர் எப்படி பாஜக கூட்டணிக்கு செல்வார்” என பேசியுள்ளார்.

Source link

• Nitish Kumar To Continue As Bihar Chief Minister, 2 Deputies From BJP Likely: Sources

Nitish Kumar To Continue As Bihar Chief Minister, 2 Deputies From BJP Likely: Sources

Nitish Kumar: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், I.N.D.I.A.  கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் நிதிஷ்குமார் கூட்டணி?
நிதீஷ் குமார் பீகார் முதலமைச்சராக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏழாவது முறையாக, அதுவும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். இந்நிலையில், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி, மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பீகாரில் உள்ள தனது கட்சி எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டம்  நாளை மாலை 4 மணிக்கு பாட்னாவில் நடைபெற உள்ளது.
பாஜகவிற்கு அமைச்சரவையில் இடம்?
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிதிஷ் குமார் திரும்புவதன் பின்னணியில் பல கணக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ”கூட்டணியில் உள்ள ஒவ்வொரு நான்கு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் விகிதம், பாஜகவிற்கு பதவி வழங்க வேண்டும். மக்களவை தேர்தலின் போது கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறையும் என்றும் கூறப்படுகிறது. 2019ல் நிதிஷ்குமாரின் கட்சி 17ல் போட்டியிட்டு 16 இடங்களை வென்றது. ஆனால் இப்போது 12-15 தொகுதிகள் மட்டுமே நிதிஷ்குமார் கட்சிக்கு ஒதுக்கப்படும்” என்பது போன்ற நிபந்தனைகளை ஏற்றே, பாஜக உடன் மீண்டும் அவர் கூட்டணி அமைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் ஆட்சி கலைகிறதா?
நிதிஷ்குமாரின் இந்த கூட்டணி தாவலால் பீகாரில் ஆட்சி கவிழுமா என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். ஆனால், தற்போதைய சூழலில் பீகாரில்  சட்டமன்றம் கலைக்கப்படாது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகாரில் எப்படியும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் எந்தக் கட்சியும் ஆட்சி கலைப்பு நடவடிக்கைக்கு ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது. அதேநேரம், அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவை தேர்தல் மீது உடனடியாக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நொறுங்கும் INDIA கூட்டணி:
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னிற்கு மேற்கொண்ட, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் அதிருப்தியில் இருப்பதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.  இதன் வெளிப்பாடாகவே, I.N.D.I.A. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கியபோதும் கூட, அதனை ஏற்க மறுத்தார். இந்நிலையில் தான் அவர் I.N.D.I.A. கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜகவில் இணையப் போவதாக நம்பகத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப்போவதாக திரிணாமுல் காங்கிரசும், பஞ்சாபில்  தனித்து போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சியும் அறிவித்துள்ளது. இந்நிலையில் நிதிஷ்குமாரும் கூட்டணி மாற்றம், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ள I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், இந்த கூட்டணி தொடருமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

Source link

• பிரம்மாஸ்திரத்தை எடுத்த பாஜக! சிக்னல் கொடுக்கும் நிதிஷ் குமார்! கதை ஓவர் ஓவர்!

பிரம்மாஸ்திரத்தை எடுத்த பாஜக! சிக்னல் கொடுக்கும் நிதிஷ் குமார்! கதை ஓவர் ஓவர்!

தேசிய அளவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த இவர், பிகார் மாநில முதலமைச்சராக 8 முறை பதவி வகித்துள்ளார். பாஜகவுக்கு எதிரான I.N.D.I.A கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய இவர், ஒரு காலத்தில் பாஜகவுடன் நெருக்கமான உறவை பேணி வந்தார்.

கூட்டணி மாறுகிறாரா நிதிஷ் குமார்?

அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை தொடங்கி ரயில்வே வரை பல முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார். பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

மக்களவைத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், கட்சியில் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் முதலமைச்சரானார். 2015ஆம் ஆண்டு, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பரம எதிரியாக கருதப்படும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் லாலுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மீண்டும் முதலமைச்சரானார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி மெகா கூட்டணியில் இருந்து வெளியேறினார். பின்னர், மீண்டும், பாஜகவுடன் கைகோர்த்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

தன்னுடைய கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறி, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து மீண்டும் விலகி லாலுவுடன் கைகோர்த்தார். இப்படி, மாறி மாறி கூட்டணி வைத்த நிதிஷ், பாஜகவுக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார்.

பாஜக எடுத்த பிரம்மாஸ்திரம்:

I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், சமீப காலமாக, நிதிஷ் குமார் செய்து வரும் செயல்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்க மறுத்த சம்பவம் பேசுபொருளானது. அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்வாரோ என கேள்விகளை எழுப்பியது.

இந்த நிலையில், மறைந்த பிகார் முதலமைச்சரும் சோசலிச தலைவர்களில் ஒருவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது I.N.D.I.A கூட்டணியில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஒரு நல்ல முடிவை எடுத்திருப்பதாக பாஜகவுக்கு நிதிஷ் குமார் பாராட்டு தெரிவித்திருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

"முன்னாள் முதலமைச்சரும், மாபெரும் சோசலிஸ்ட் தலைவருமான மறைந்த கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது மத்திய அரசின் நல்ல முடிவு" என எக்ஸ் தளத்தில் நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நேர்மாறாக பாஜக மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளது நிதிஷ் குமாரின் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம். இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த மிருத்யுஞ்சய் திவாரி பேசுகையில், "கர்பூரி தாக்கூர் உயிருடன் இருந்தபோது பாஜக அவரை வார்த்தைகளால் திட்டியது. 9 ஆண்டுகளாக அவரை நினைவில் கொள்ளவில்லை.

எங்கள் கட்சியும் தலைவர் லாலு யாதவும் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் கர்பூரி தாக்கூரை நினைவு கூர்ந்து அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குகிறார்கள். வாக்குகளுக்காக அவரை நினைவுகூருகிறார்கள்" என்றார்.

Source link