திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணத்தில் பேருந்து நிலையம் வரை நடந்து சென்றார். பின்பு பேருந்து நிலையம் அருகே கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடினார்.

அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

திமுகவின் தேர்தல் அறிக்கையில் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள்வரை கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்யவில்லை.

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 2 ஆண்டுகளில் 2 லட்சத்தி 69 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியுள்ளனர். மக்களிடம் பொய்யான வாக்குறுதியை கூறி ஆட்சி நடத்தி வருகின்றது. இதேபோன்று சென்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக எம்.பி வெற்றி பெற்றால் இளைஞர்களுடைய கல்விக் கடனை தள்ளுபடி செய்வோம் என்றும், நீட் தேர்வை அகற்றி விடுவோம் எனவும் தொடர்ச்சியாக பொய்யான வாக்குறுதியை ஸ்டாலின் கூறி வருகிறார்.

நீட் ரகசியம் குறித்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றும் சிறிய அட்டைகளில் ரகசியம் உள்ளது என்று கூறி சேலம் இளைஞர் மாநாட்டில் அந்த கையெழுத்து விளக்கம் குப்பைத் தொட்டியில் போடப்பட்டது

திமுக நடத்துகிற மருத்துவ கல்லூரியில் திமுகவின் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக சீட் கொடுப்பார்களா?

தமிழகத்தில் அமைச்சரவையில் உட்கார்ந்து கொண்டு நீட் தேர்வை எதிர்த்து பேசக்கூடிய நபர்கள் யார் என்றால் கே.என்.நேரு, கே.கே.எஸ்.ராமச்சந்திரன், டி.என்.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, ஆர் காந்தி ஆகியோர். இவர்கள் எல்லாம் படிக்கத் தெரியாதவர்கள். இவர்கள் ஏன் நீட்டை பற்றி பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை.

கல்வி என்றாலே என்னவென்று தெரியாதவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், மணல் கடத்தியவர்கள் நீட்டை எதிர்த்து பேசி வருகிறார்கள். நீட் வேண்டாம் என்றால் திமுகவினர் நடத்தக்கூடிய தனியார் மருத்துவ கல்லூரியில் திமுகவின் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக சீட் கொடுப்பார்கள் என்றால்,நீட் வேண்டாம் என்று நானும் உங்களுடன் போராடுகிறேன்.

திமுகவினர் நடத்தக்கூடிய தனியார் மருத்துவ கல்லூரிகளில் 1 கோடி 2 கோடி என்று சீட்டுக்கு டொனேஷன் வாங்குவதற்காகநீட் வேண்டாம் என்று திமுகவினர் போராடுகிறார்கள். பாஜகவினர் 259 வாக்குறுதியும் நிறைவேற்றியுள்ளோம். தற்போது 2024-க்கான வாக்குறுதியை செய்துவிட்டு, 2026 ஆம் ஆண்டு, உங்களிடம் வாக்கிற்காக வருவோம்.

விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கினை உயர்நீதிமன்றத்தில் நீக்கிக் கொடுப்போம்

சிப்காட் அமைப்பதற்கு தங்களுடைய விலை நிலங்களை கொடுக்க மாட்டோம் என 200 நாட்களுக்கு மேல் போராடிய விவசாயிகளின் மீது குண்டாஸ் சட்டம் போட்ட முதல் அரசு திராவிட முன்னேற்றக் கழகம். குண்டாஸ் போடப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுவிக்கவில்லை என்றால் பாஜக கட்சி களத்தில் போராடுவோம் என கூறியதை அடுத்து முதல்வர் மற்றும் ஏடிஎம் வேலு சேர்ந்து விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் அகற்றப்பட்டது.

விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கினை உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி சொந்த செலவில் வழக்கு தொடுத்து அனைத்து வாழக்குகளை நீக்கிக் கொடுப்பதாக என் மக்கள் யாத்திரையில் உறுதி அளிக்கிறோம்.’’

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்தார்.

Tag: செய்யாறு

திமுகவினரின் மருத்துவக் கல்லூரியில் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீட்டு கொடுப்பீர்களா? அண்ணாமலை சவால்

crime Youth who kidnapped and molested 16-year-old girl through Instagram arrested in Poso act
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதி ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண். இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயது பெண்ணையும் அவருடைய தந்தையும், பெண்ணின் தாய் வீட்டில் விட்டுவிட்டு பெண்ணின் தாய் அவருடைய தாய் வீட்டிற்கு மகன் மற்றொரு மகளையும் அழைத்து சென்று விட்டார்.
இன்ஸ்டாகிராமில் காதல் நாடகமாடி 16 வயது பெண் கடத்தல்
இந்த நிலையில் 16 வயதுடைய பெண் திடீரென மாயமானார். இந்த சம்பவம் குறித்து அனுக்கவூர் காவல் நிலையத்தில் பெண்ணின் தாய் புகார் செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணையில் திருவாரூர் மாவட்டம் குச்சிபாளையம் சேர்ந்த கதிரவன் வயது (19) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதில் கதிரவன் 16 வயது பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி பழகி வந்துள்ளார். இந்தநிலையில் இருவருக்கும் இடையே நட்பு காதலாக மாறியுள்ளது. இந்த பழக்கத்தால் 16 வயது பெண்ணை கதிரவன் வீட்டுக்கு வெளியே வரச்சொல்லி பெண்ணை கடத்தி சென்றுள்ளார்.
மேலும் படிக்க; Tamizhaga Vetri kazhagam: தொடங்கிய சர்ச்சை: தமிழ்நாடு இல்லையா… தமிழக வெற்றி கழகம் ஏன்?இளைஞர் போக்சோவில் கைது
அதனைத் தொடர்ந்து கடத்தி சென்ற 16 வயது பெண்ணை கதிரவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கதிரவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார்கள் குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை எண் மூலம் 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது.
மேலும் படிக்க ;உலகை ஆட்டிப்படைக்கப்போகும் புற்றுநோய்! காத்திருக்கும் அதிர்ச்சி.. பகீர் கிளப்பும் WHO அறிக்கை!மேலும் காண

Tiruvannamalai | திருவண்ணாமலை
(Tiruvannamalai News) திருவண்ணாமலை தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, 30.01.2024 முதல் சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு, தின்டிவனம் வழியாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும்.
பேருந்துகள் தாம்பரம் சென்று கிளாம்பாக்கம் சென்றடையும்
இந்த நிலையில் திருவண்ணாமலை, போளுர், மற்றும் வந்தவாசி ஆகிய ஊர்களில் இருந்து நேற்று (29.01.2024) இரவு 12 மணிக்கு மேல் சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் இனி கிளாம்பாக்கம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின்னர் தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் சென்றடையும். மேற்கண்ட ஊர்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
ஆரணி, செய்யாறு பகுதி பேருந்துகள் கோயம்பேட்டிற்கு செல்லும்
மேலும், மாதவரம் பேருந்து முனையம் வரை இயக்கப்படும் பேருந்துகள் மதுரவாயல் சுங்கச்சாவடி, அம்பத்தூர் எஸ்டேட் வழியாக MMBT-க்கு இயக்கப்படும். ஏற்கனவே ஆரணி, செய்யாறு பகுதிகளில் இருந்து பூந்தமல்லி மார்க்கமாக சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் எவ்வித மாற்றமும் இன்றி கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும். 30.01.2024 முதல் மேற்கண்ட ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. எனவே இப்பேருந்து இயக்க மாற்று ஏற்பாட்டின்படி பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.