Shocking Video Saudi Arabia First Male Robot Harasses Reporter On Live TV | Shocking Video: பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ! இந்த அநியாயத்தை பாருங்க


Shocking Video: சவுதி அரேபியாவில் ஆண் ரோபா ஒன்று பெண் தொகுப்பாளரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.
பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ
அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன்.  தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஏஐ தொழில்நுட்ப மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகளை தொழிற்நுட்ப வல்லுநர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அதில் ஒன்று தான் ஏஐ ரோபோ. ஏஐ கருவிகளால் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனித குலத்தையே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், இந்த ஏ.ஐ. கருவிகள் மனிதர்களின் வேலைகள் மற்றும் பாதுகாப்பிற்கும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. 
இப்படிப்பட்ட சூழலில், ஏஐ கருவி மூலம் உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்று பெண் தொகுப்பாளரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாக சர்ச்சை கிளப்பியுள்ளது. 
வைரல் வீடியோ:

Saudi Robots were announced today🤖pic.twitter.com/f6QHkxzqQO
— Tansu Yegen (@TansuYegen) March 5, 2024

அதாவது, சவுதி அரேபியாவின் முதல் ஆண் ரோபோ முஹம்மது, நேரலை நிகழ்ச்சியில் ஒரு பெண் தொகுப்பாளரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டுள்ளது. அந்த பெண் தொகுப்பாளர் ரோபோ குறித்து பேசிக் கொண்டு  இருக்கும்போது, அந்த ரோபோ திடீரென பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறது. ரோபோவின் செயலை உணர்ந்த அந்த பெண் தொகுப்பாளர், ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார்.
அதன் பிறகு ரோபோ அந்த செயலில் நிறுத்துவது போன்று வீடியோவில் உள்ளது. இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் தொகுப்பாளருக்கு ரோபோ பாலியல் ரீதியாக சீண்டியதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.  

மேலும் படிக்க
PM Modi: “புதிய ஜம்மு காஷ்மீர்” ஸ்ரீநகர் பொதுக்கூட்டத்தில் மனம் திறந்து பேசிய பிரதமர் மோடி!
CM Stalin: சமூகத்தின் சரிபாதி பெண்கள்! மகளிர் உரிமையை முழுமையாக பெறும் வரை பயணிப்போம் – முதலமைச்சர் மகளிர் தின வாழ்த்து

மேலும் காண

Source link