புற்றுநோய் பாதிப்பு காரணமாக இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசி கேத் மிடில்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு கீமோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். அதன்படி தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்த நோய் பாதிப்பு குறித்த தகவலை வெளியிடாமல் இருந்தோம். புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்த போது எனக்கும் வில்லியம்ஸூக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் ஜனவரி மாதம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் உடல் நலம் மீண்டு வர நீண்ட காலம் ஆனது. அதனால் புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற முடியவில்லை. தற்போது சிகிச்சை தொடங்கியுள்ள நிலையில் எங்கள் குழந்தைகளிடம் இப்பிரச்சினையை புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் தற்போது நலமாக இருக்கிறேன். நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் உடலளவிலும், மனதளவிலும் வலுப்பெற்று வருகிறேன்” என கேத் மிடில்டன் கூறியுள்ளார். இந்த தகவல் இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காணாமல் போன இளவரசி

இளவரசி கேத் மிடில்டன், கடந்த ஜனவரி மாதம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் வயிற்றில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் கேத் உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவ தொடங்கியது. மேலும், அன்னையர் தினம் அன்று கேத் தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை எடிட் செய்து வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பின்னர் இந்த புகைப்படத்துக்கு அவர் வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் கடந்த வாரம் லண்டனில் நடந்த செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் இளவரசி கேத் மிடில்டன் பங்கேற்காதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிலர் சமூக வலைதளங்களில் இளவரசி இறந்து விட்டதாக தகவல் பரப்ப பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: Deepfake: மீண்டும் வெடித்த டீப் பேக் சர்ச்சை.. பரப்பப்படும் போலி வீடியோ.. ஷாக்கான இத்தாலி பிரதமர்!

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Для получения дополнительных данных можно проверить дополнительный раздел, по этой ссылке
Если вы хотите быстро и качественно оформить [url=https://karkasnye-doma-spb12.ru]каркасный дом под ключ в спб[/url], обращайтесь к проверенным специалистам. В итоге, такой…
Choose the game section of https://www.fidetec.com/sports-betting-odds-online/ to select the game you’re interested in. For users interested in slots slots and…
Explore https://mcdonaldspreise.de/online-sports-entertainment-egypt/ entertainment sections taking into account the format you’re interested in. Here presented esports. Choose live event and start…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘வாக்காளர் பட்டியலைக் கையாண்டார்’: மஹுவா மொய்த்ரா, SIR வரிசை தொடர்பாக ஞானேஷ் குமார் மீது போலீசில் புகார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘ஞானேஷ் செல்ல வேண்டும்’: செப்டம்பர் 25-ம் தேதி மாநில தேர்தல் ஆணையங்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு ஊர்வலம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘ஒரு கொலைக்கு மன்னிப்பு கேட்டால், ஞானேஷை சுட்டுக் கொன்று விடுவேன்’: எஸ்.ஐ.ஆர் வழக்கு தொடர்பாக, CEC-யை குறிவைத்த விஐபி தலைவர் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

HOSPEX அதன் ஆறாவது பதிப்பில் நுழைகிறது, கேரளாவின் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பு உருவாகிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஞானேஷ் குமார் மீது ‘தேசத்துரோக’ குற்ற வழக்கு தொடர வேண்டும்: பிரியங்கா காந்தி மீது எஸ்ஐஆர் வழக்கு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

![‘ஹனுமான் அன்ஷ்’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 49 [LIVE]: விஷால் சதுர்வேதி மற்றும் ஷோபினாவ் சத்யாவின் நீம் கௌர்லி பாபாவின் ஆன்மீக வாழ்க்கை வரலாறு வேகத்தைத் தக்கவைத்துக்கொண்டது, கண்கள் ரூ. 290 கோடி இந்திய நிகரம் | இந்தி திரைப்பட செய்திகள்
| ACTPnews.com](https://actpnews.com/wp-content/uploads/2026/09/1790065935-300x169.avif)

[url=https://trop75.at]trip at[/url]