Nitish Kumar Taken Oath As Bihar Cm Timeline Of His Political U Turns With Bjp Rjd | Nitish Kumar: பீகார் அரசியல்

Nitish kumar: பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார், இதுவரை அரசியல் கூட்டணியில் எடுத்துள்ள தடாலடி மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மீண்டும் முதலமைச்சரான நிதிஷ் குமார்:
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இது தேசிய அரசியல்  வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை பதவியை ராஜினாமா செய்து, இரண்டு முறை மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இப்படி திடீர் திடிரென கூட்டணியை முறித்துக் கொள்வது என்பது நிதிஷ்குமாருக்கு புதியதல்ல. அப்படிபட்ட முடிவுகளால் கடந்த 24 ஆண்டுகளில் 9 முறை நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அடிக்கடி கூட்டணியை மாற்றுவதால் இவரை பல்டிமார் என விமர்சிப்பதும் உண்டு. அந்த வகையில் கடந்த காலங்களில் அவர் எடுத்த பல தடாலடியான முடிவுகள் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 
மார்ச் 2000 : ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாஜக ஆதரவுடன் மார்ச் 3, 2000 அன்று நிதிஷ்குமார் முதல் முறையாக முதலமைச்சரானார். ஆனால், ஏழு நாட்கள் மட்டுமே அவர் ஆட்சி நீடித்தது. 2003 ஆம் ஆண்டில், நிதிஷ் குமார் ஷரத் யாதவுடன் சேர்ந்து ஐக்கிய ஜனதா தளத்தை உருவாக்கினார்.
நவம்பர் 2005: நிதிஷ்குமார் பாஜக ஆதரவுடன் 2005ம் ஆண்டில் பீகார் முதலமைச்சராக பதவியேற்று ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
நவம்பர் 2010: மீண்டும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார், ஆனால் இந்த முறை அவரது ஆட்சி மே 19, 2014 வரை வெறும் 3.5 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2013 இல் அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராஅக் முன்னிறுத்தப்பட்டபோதை எதிர்த்து,  NDA உடனான 17 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொண்டார்.
பிப்ரவரி 2015:  RJD மற்றும் காங்கிரஸுடன் கைகோர்த்து, 2015 இல் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சரானார். இருப்பினும், அவர் 2017 இல் கூட்டணியை முறித்துக் கொண்டார். ஆனாலும், மீதமிருந்த 8 மாத ஆட்சிக் காலத்தை அவரது அரசு பூர்த்தி செய்தது.
நவம்பர் 2015 : ஆர்ஜேடியின் உதவியுடன் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார். அந்த அரசாங்கம் 1 வருடம் 8 மாதங்கள் மட்டுமே நீடித்தது. 
ஜூலை 2017 : பாஜக உதவியுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இம்முறை அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள், 3 மாதங்கள் மற்றும் 2 வாரங்கள் நீடித்தது.
நவம்பர் 2020: சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார். இம்முறை இந்த கூட்டணியின் ஆட்சி ஆகஸ்ட் 2022 வரை நீடித்தது.
ஆகஸ்ட் 2022: பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் RJD மற்றும் காங்கிரஸ் உதவியுடன் பீகார் முதலமைச்சரானார் நிதிஷ் குமார். துணை முதலமைச்சராக ஆர்ஜேடி தலைவரான தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இந்த ஆட்சி  ஜனவரி 28, 2024 வரை நீடித்தது. அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரத்திலேயே, நேற்று மீண்டும் பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்றார்.

Source link