தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 451 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 151 கன அடியாக குறைந்துள்ளது.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 70.92 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.49 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.34 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.07 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,004 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,879 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.28 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.35 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 489 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Liked the natural conversational tone throughout, never stiff and never overly casual either, and a stop at canyonharboroutpost kept that…
Quality you can feel from the first paragraph, the writer clearly knows the topic and how to share it, and…
Reading this gave me confidence to make a decision I had been putting off, and a stop at zunvoro reinforced…
Held my interest from the opening line through to the closing thought, and a stop at velvetridgecommercehub did the same,…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

சுப்ரீம் கோர்ட்: சந்திக்க ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்றம், பிறகு மனம் மாறியது: ONOE குழு தலைவர் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

வேலைக்குச் செல்லும் 15% பேர் மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்: NSO | இந்தியா செய்திகள் | ACTPnews.com

நீதித்துறை முறைகேடு: ‘நீதித்துறை முறைகேடு’: முன்னாள் தலைமை நீதிபதி கவாய், எஸ்ஐஆரை விமர்சித்து எஸ்சி நீதிபதி புயான் கூறிய கருத்துகள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஆப்ஸ் அடிப்படையிலான மற்றும் டிஜிட்டல் போக்குவரத்து சேவைகளை கண்காணிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தேசிய மகளிர் ஆணையம் வெளியிடுகிறது இந்தியா செய்திகள் | ACTPnews.com

ரஷ்ய ட்ரோன் தாக்குதல்: துருக்கிய சரக்கு கப்பலை ரஷ்ய ஆளில்லா விமானம் தாக்கியதில் இருவர் பலி, இந்தியர் ஒருவர் காயம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed

ஒரு கனடிய தம்பதியினர் 2017 இல் இரண்டு 8-12-அடி அடுக்குகளுடன் அஸ்லான் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினர்; ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் 50-ஏக்கர் ஒன்டாரியோ பண்ணைக்கு சொந்தக்காரர் மற்றும் அவர்களது 2.5-ஏக்கர் சந்தை தோட்டம் ஆண்டு வருமானத்தில் $200,000 ஐ தாண்டியதாக கூறுகிறார்கள் உலக செய்திகள் | ACTPnews.com

Genuinely useful read, the points are practical and easy to apply right away, and a quick look at tirvilo confirmed…