Mandaadi: ``10 வயது சிறுவனிடம் கேட்டால் கூட சொல்கிறான்" - தவெக அரசியல் குறித்து நடிகர் சூரி | Mandaadi: "Even a 10-year-old boy can tell you" – Actor Soori on TVK politics.


விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “மண்டாடி’. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். நாகையைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள `மண்டாடி’ மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், திரைப்படம் 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நடிகர் சூரியும், நடிகை மஹிமா நம்பியாரும் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “ ‘மண்டாடி’ திரைப்படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. மீனவர் சமூகம் சார்ந்த ஒரு கதையை மையமாகக் கொண்டுதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூரி

நடிகர் சூரி

இந்த ‘மண்டாடி’ திரைப்படம் நமது மீனவ மக்களின் வாழ்க்கை, அவர்களின் மரியாதை, அவர்களது உறவுகள் மற்றும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் உணர்ச்சிகள் என அனைத்தையும் பிரதிபலிக்கும். அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் படம் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதே நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி, பாசிப்பட்டினம், புதுக்குடி போன்ற கடலோரக் கிராமங்களில் பல வருடங்களாக பாரம்பரியமாக ‘பாய்மரப் படகு போட்டி’ நடந்து வருகிறது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed