மாநில அரசின் தலையீடு இல்லாமல் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு 100 நாள் வேலைத்திட்டம் பதிவு செய்யும் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என்று கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி அளித்தார்.
கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரியபட்டி, காளையபட்டி, காணியாளம்பட்டி, வீரணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த அவருக்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது காளையப்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடம் பேசிய செந்தில்நாதன், வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் ஊழல் இல்லாமல் மோடி கொடுத்து வருகிறார்.
குறிப்பாக 100 நாள் வேலை திட்டம். மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்போது 150 நாளாக மாற்றி தரப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மாநில அரசின் தலையீடு இல்லாமல், நேரடியாக மத்திய அரசின் கீழ் அந்த திட்டம் கொண்டுவரப்பட்டு, பதிவு செய்யும் அனைத்து மக்களுக்கும் 100 நாள் வேலை கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும் காண