விழுப்புரம்: தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 19 பேர் கொண்ட தலைமை நிர்வாக கூட்டம் தொடங்கியது. இதில் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, பேராசிரியர் தீரன், வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே மூர்த்தி, வழக்கறிஞர் பாலு, சட்டமன்ற உறுப்பினர் அருள், சிவகுமார், சதாசிவம், முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் கி.ஆறுமுகம் ஆகியோர் உயர்மட்டக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். பின்னர், 6 மணி அளவில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது,

அதிமுக – பாமக கூட்டணி ?

மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதுஇ நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி பாமக அதிமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாமகவிற்கு 6 மக்களவை தொகுதியும், 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 6 தொகுதிகள் வட தமிழ்நாட்டிலும், தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியும் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடே மிகவும் எதிர்ப்பார்த்த மக்களவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டி மக்களவை தேர்தல் வரும் ஏபரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி கட்டம் எட்டியுள்ளது. கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளர் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள் என்பது குறித்து இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக உடன் எந்த கட்சி கூட்டணியில் இடம்பெறும் என்பது குறித்து உறுதியாகமல் இருந்தது. இதற்கிடையில் பாமக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில் பாமக, பாஜக உடன் கூட்டணி அமைக்கும் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி இதறகான உடன்படிக்கை கையெழுத்தாகும் என தகவல்கள் கூறுகின்றன. பாமகவிற்கு 6 மக்களவை தொகுதியும், 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. பாமகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்க அதிமுகவிற்கு விருப்பம் இல்லையென்றால் கூட கூட்டணி கருத்தில் கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
vale la prorroga en las calculadora apuestas seguras [Loretta]
Посоветуйте сервис накрутку реакций в тг недорого. Нужны были эмодзи на канал. Работают тут: [url=https://nakrutka-reakcij-v-tg-474.ru]nakrutka-reakcij-v-tg-474.ru[/url]. Проверил — сделали нормально. Буду…
накрутка ga сео купить накрутка пф
Подробно о событии: https://norilskarenda.ru
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன? | DMK Councillors in Black Shirts; Mayor Priya Writes to CM Vijay – What’s the Reason? | ACTPnews.com

"பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி | ACTPnews.com

"மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" – கர்நாடக முதல்வர் | ACTPnews.com

`புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்?’ – பேரவையில் முதல்வர் ரங்கசாமி கொடுத்த விளக்கம் \ Puducherry CM Rangasamy explains reason of not having the local body election | ACTPnews.com

aposta desportiva online Here is my website – apostas esportivas aprender