இமாச்சலப் பிரதேசத்தில், மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், மங்லாட்-பக்வத் சாலை மூடப்பட்டது.
சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் உட்பிரிவின் கின்னு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மங்லாட்-பக்வத் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, பள்ளத்தாக்கில் பாறைகள் விழும் காட்சிகளை, உள்ளூர் மக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
#WATCH | Himachal Pradesh: Manglad-Bagvat road was closed after a landslide in the Kinnu area of Rampur subdivision in Shimla district yesterday.
(Video confirmed by Police) pic.twitter.com/ul10GPJvcK
— ANI (@ANI) August 6, 2023
இந்த நிலச்சரிவில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.