Kumbakonam: கடும் வெயில்; வறண்டுபோன குளங்கள்! செத்து கருவாடாகும் மீன்கள்! கும்பகோணத்தில் பரிதாபம்

கோடை வெயில் உக்கிரத்தால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கிராமப்பகுதிகளில் உள்ள குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் பாலைவனம்மாக காட்சியளிக்கிறது. இந்த குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்கள் வெயில் தாக்கத்தால் உயிரிழந்து வருவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே கொளுத்தும் வெயில்

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு வகைகளும் அவதி அடைந்து வருகின்றனர். முக்கியமாக உடலில் நீர்ச்சத்து வற்றுவதால் பொதுமக்கள் தர்பூசணி, வெள்ளரி, சர்பத் இளநீர் ஆகியவற்றை தேடி பிடித்து சாப்பிடும் நிலையில் உள்ளனர். மதிய வேலைகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கோடை காலம் தொடங்கி விட்டாலே கோடையை சமாளிக்க பொதுமக்கள் படாதபாடுபடுவார்கள். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரித்து வருவதால் அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில் வெயில் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது.

மதிய நேரத்தில் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்

தற்போது தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே தயங்குகின்றனர். வேறு வழியில்லாத நிலையில் குடை பிடித்து கொண்டு வாகனங்களில் செல்பவர்கள், துணியால் தங்கள் தலையை மூடிய படியும் வெளியில் சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 95 டிகிரி, 96 டிகிரி என இருந்தது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் அதிகமாக காணப்பட்டது.

குளங்களில் தண்ணீர் வற்றியது

இந்த வெயிலால் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் உள்ள குளங்கள், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வற்ற தொடங்கி விட்டது. கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம்  சோழன்மாளிகை பகுதியில் குளம் ஒன்று உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையில் குளத்துக்கு ஒரளவு தண்ணீர் வந்தது. அந்த சமயத்தில் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மழை பெய்ததால் தண்ணீர் நிரம்ப தொடங்கியது. அதன்பின்னர் போதிய மழை பெய்யவில்லை. இதனால் தண்ணீர் வேகமாக வற்ற தொடங்கியது. இதனால் குளம் குட்டை போல் காட்சி அளிக்கிறது. மேலும் குளத்தில் தண்ணீரும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இந்த குளத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் மீன்கள் வளர்த்து வருகின்றனர்.

தண்ணீர் இல்லாதால் மீன்கள் இறப்பு

தற்போது வெயில் கொளுத்தி வருவதால், மதிய நேரங்களில் தண்ணீர் வெந்நீர் போல் கொதிக்கிறது. ஓரங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் வளர்க்கப்படும் மீன்கள் வெயில் தாக்கத்தால் தண்ணீர் அதிக அளவு சூடாகி உயிரிழந்து வருகின்றன. தற்போது அந்த மீன்கள் அனைத்தும் வளர்ந்து விட்ட நிலையில் வெயிலால் உயிரிழந்து வருகிறது. மீன்களை காப்பாற்றவும், குளத்தில் தண்ணீரை நிரப்பவும் அந்த பகுதியை சோ்ந்த மக்கள் அருகில் உள்ள வயலில் உள்ள கிணறு மற்றும் ஆழகுழாய் மூலம் தண்ணீரை குளத்தில் பாய்ச்சி வருகின்றனர். இருப்பினும் வெயில் மற்றும் குளத்தின் வறண்ட பகுதிகளில் தண்ணீர் பாய்ந்து வேகமாக காய்ந்து விடுகிறது. இதனால் அக்னி நட்சத்திரம் கொளுத்தும் முன்பே கோடை மழை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

Source link