Kerala Governor: கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கொல்லம் பகுதியில் தன்னை முற்றுகையிட வந்த போராட்டக்காரர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதோடு, போராட்டக்காரர்கள் அனைவரயும் கைது செய்ய வேண்டும் என காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளார். அதுவரை இங்கு இருந்து செல்லப்போவதில்லை என, தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டார்.
കൊല്ലം നിലമേൽ ഗവർണർക്ക് SFI യുടെ കരിങ്കൊടി; പൊലീസിനെ ശകാരിച്ച് റോഡിലേക്കിറങ്ങി ഗവർണർ. #arifmohammadkhan #sfi #zeemalayalamnews @KeralaGovernor. pic.twitter.com/0PY8ex5ayJ
— Zee Malayalam News (@ZeeMalayalam) January 27, 2024
ஆளுநருக்கு கருப்புகொடி:
நிலமெல் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இடதுசாரி கட்சிகளின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ பிரிவைச் சேர்ந்த நபர்கள் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டினர். அவருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். அப்போது நிறுத்தி வெளியே இறங்கி வந்த ஆளுநர், போராட்டக்காரர்களை நோக்கி வேகமாக சென்றார். உடனடியாக போலீசார் அங்கு குவிய, போராட்டக்காரர்களை ஏன் கைது செய்யவில்லை. அவர்களை உடனடியாக கைது செய்யுங்கள் என வலியுறுத்தினார். காவல்துறையினரும் உடனடியாக செயல்பட்டு போரட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறத்தினர். ஆனாலும், ஆளுநர் அங்கு இருந்து செல்ல மறுப்பு தெரிவிவித்து விட்டார்.
#WATCH | “I will not leave from here. Police is giving them protection, ” says Governor Arif Mohammed Khan after SFI activists held a protest against him in Kollam. Police present on the spot https://t.co/nQHF9PWqpr pic.twitter.com/RHFFBRCh9s
— ANI (@ANI) January 27, 2024
























Speaking as someone who reads a lot on this topic this site has earned a high position in my source…