Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில், ஆர் ஜே பாலாஜி எழுதி இயக்கிய “கருப்பு” திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்திலேயே பல பிரச்சனைகளை சந்தித்த இந்த படம், இறுதியாக வெளியானதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

Karuppu movie Suriya RJBalaji

கருப்பு ட்விட்டர் ரிவ்யூ

இந்த நிலையில், எக்ஸ் (Twitter) தளத்தில் வெளியாகியுள்ள ரிவ்யூக்கள் படத்திற்கு கூடுதல் ஹைப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, ஒரு பிரபல ட்ரெண்ட்ஸ் பக்கத்தில் “Karuppu 4/5 – முதல் பாதி எமோஷனல், இரண்டாம் பாதி முழுக்க மாஸ். டீசர் அல்லது ட்ரெய்லரில் காட்டப்படாத சர்ப்ரைஸ் அம்சங்கள் படத்தில் நன்றாக வேலை செய்துள்ளன. இரண்டாம் பாதியில் ஒரு குறிப்பிட்ட காட்சி சுமார் 2 நிமிடங்கள் தியேட்டரில் இடைவிடாத விசில் மற்றும் ஆரவாரம் எழுப்பியது. தொழில்நுட்ப ரீதியாக படம் மிகச்சிறப்பு. DOP வேலை அசத்தல், சாய் அபயங்கரின் BGM படம் முழுவதையும் தூக்கி நிறுத்துகிறது. இது ஒரு பியூர் கமர்ஷியல் சினிமா” என்று பதிவிடப்பட்டுள்ளது.

கருப்பு படம் ரிவ்யூ

மேலும், மற்றொரு ரசிகர் பகிர்ந்த பதிவில், “படம் முழுக்க கமர்ஷியல் மற்றும் எமோஷன் கலந்ததாக உள்ளது. சூர்யா கருப்பசாமியாக வரும் காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது. முதல் சண்டைக் காட்சி மற்றும் இடைவேளை காட்சிகளில் இசை மிகவும் உதவியாக உள்ளது. திரைக்கதை எங்கும் தொய்வில்லாமல் செல்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

கருப்பு படம் விமர்சனம்

அதேபோல் இன்னொரு ரசிகர், “90-களில் அம்மன் கதைகள் போல இங்கும் மக்களை காப்பாற்ற கருப்பசாமி வருகிறார். பழைய கதைக்களம் என்றாலும், அதை புதுமையாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். சாய் அபயங்கரின் பின்னணி இசை படத்தின் பல காட்சிகளை உயர்த்துகிறது. திரிஷா மற்றும் ஸ்வாசிகா கதாபாத்திரங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்” என்று விமர்சித்துள்ளார்.

Karuppu movie Suriya RJBalaji

கருப்பு படம் ரசிகர்கள் கருத்து

இதேவேளை, ரசிகர்களிடையே கலவையான கருத்துகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, “படம் தொடங்கி 30-40 நிமிடங்கள் கழித்து தான் சூர்யா வருகிறார். ஆனால் அவர் என்ட்ரி பக்கா தியேட்டரிக்கல் மொமண்ட்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும், “இடைவேளை காட்சி உணர்ச்சிகரமாக அமைந்துள்ளது, அதனால் சிலர் அழுதுவிட்டோம்” என ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.

மேலும் மற்றொரு ரசிகர் பதிவில், “#Karuppu interval – மெரட்டிட்டு இருக்கார்! Fantastic concept @RJ_Balaji brother!! Top engagement so far! Karuppan kai vidala anna @Suriya_offl!!” என்று குறிப்பிடப்பட்டு, படத்தின் இடைவேளை காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

மேலும், இன்னொரு ரசிகர் உணர்ச்சியுடன், “இடைவேளை வரைக்கும் கண்ணீர் வந்தது, கதையின் உணர்ச்சி எங்களை பாதித்தது” என்று பதிவிட்டுள்ளார். இது படம் எமோஷனல் அளவில் ரசிகர்களை தொடுவதாக சுட்டிக்காட்டுகிறது.

மொத்தத்தில் பார்க்கும்போது, “கருப்பு” படம் ஒரு பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னராகவும், அதே நேரத்தில் எமோஷனல் எலெமெண்ட்ஸும் கொண்டதாகவும் ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர். குறிப்பாக சூர்யாவின் நடிப்பு, சாய் அபயங்கரின் இசை, மற்றும் RJ Balajiயின் இயக்கம் ஆகியவை அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

பல தடைகளை கடந்து வெளியான இந்த படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால், பாக்ஸ் ஆபிஸில் எந்தளவுக்கு சாதனை படைக்கும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed