Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை: சூர்யா ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த ஒரு முழுமையான தியேட்டர் வெற்றி தற்போது கருப்பு திரைப்படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. சமீப காலமாக சூர்யாவின் படங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறாமல் இருந்த நிலையில், இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பமாக மாறியிருக்கிறது. வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய கருப்பு, தற்போது பாக்ஸ் ஆபிஸில் வேகமாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

Suriya Karuppu RJ Balaji Trisha Tamil Cinema Box Office

கருப்பு படம் பற்றிய தகவல்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சூர்யாவுடன் திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். நீதிமன்ற பின்னணி, சமூக கருத்து, நாட்டார் தெய்வ நம்பிக்கை, மாஸ் காட்சிகள் என வித்தியாசமான கலவையோடு வந்திருக்கும் இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தள்ளி போன ரிலீஸ்

முதலில் மே 14ஆம் தேதி வெளியாக இருந்த கருப்பு, கடைசி நேரத்தில் ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட உணர்ச்சிவசப்பட்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் ஒருநாள் தாமதமாக மே 15ஆம் தேதி வெளியான பிறகு நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது.

மாஸ் கம்பேக்

முதல் காட்சியிலிருந்தே ரசிகர்கள் படத்தை கொண்டாட ஆரம்பித்தனர். குறிப்பாக சூர்யா கருப்பன் அவதாரத்தில் வரும் காட்சிகள் தியேட்டர்களில் ரசிகர்களை எழுந்து நின்று கைத்தட்ட வைத்திருக்கிறது. பலரும் “சூர்யாவுக்கு இது தான் ரியல் கம்பேக்” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Suriya Karuppu RJ Balaji Trisha Tamil Cinema Box Office

கருப்பு படம் செய்த சாதனை

சூர்யாவின் சமீபத்திய படங்கள் வசூலில் பெரிய சாதனை படைக்காத நிலையில், கருப்பு அந்த குறையை உடைத்திருக்கிறது. படக்குழு ஏற்கனவே முதல் மூன்று நாட்களில் 147 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, முதல் ஆறு நாட்களில் (Karuppu day 6 box office) உலகளவில் 175 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 100 கோடியை தாண்டியிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருப்பு படம் வசூல் நிலவரம்

பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா-திரிஷா ஜோடி மீண்டும் இணைந்திருப்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதேபோல் சாய் அபயங்கரின் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பேசப்படுகிறது. வார நாட்களிலும் படம் நல்ல நிலைப்பாட்டை தக்க வைத்திருப்பதால், வரும் வார இறுதியில் 200 கோடி கிளப்பை கருப்பு எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஒரு நாள் தள்ளிப்போன படம்… ஆனால் இப்போது பாக்ஸ் ஆபிஸையே தள்ளி வைத்து ஓடிக்கொண்டிருக்கிறது கருப்பு.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed